மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா சிவபாக்கியம்
வயது 8411 பிப்ரவரி, 1935 – 12 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- பூநகரி
- வாழ்ந்த இடம்
- தவசிக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பூநகரி தம்பிராயைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவபாக்கியம் அவர்கள் 12-08-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நமசிவாயம் செல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சண்முகதாசன்(கனடா), நிர்மலாதேவி(வவுனியா), ஜெகதீசன்(பிரான்ஸ்), சிவநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விமலேஸ்வரி, தர்மலிங்கம், ஞானாம்பிகை, கோமளாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சதீசன் சாரதா, அருணேசன் அமரகவி, அரவிந்தன் மைதிலி, பார்த்திபன் பிரியா, தர்மினி தயா, கரிகாலன், துஸ்யந்தன் சாரு, சாரங்கன் மேனகா, செந்தூரன் சர்மிதா, மயூரன் நிஜந்தா, சரண்ஜா தாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சரண், சஞ்ஜே, அஜே, அருவி, அஷ்வின், ஆரவி, ஆருஷ், அரிஷ், இசைஞன், இசானி, இனுஷன், தாரகி, தர்வின், வர்ஷன், வர்ஷானி, வர்ஷ்ரின், அஷ்வின், அனோஷ், அமிஷா, அனிஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வவுனியா தவசிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வவுனியா கந்தபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
கிளிநொச்சியில் நெல்வயல் சூழ்ந்த அழகிய இடமும்,படித்த மக்களைக் கொண்ட பிரதேசமும்,மரக்கறித் தோட்டம்,வீட்டுத் தோட்டம் என செழிப்பு மிகு பூநகரியில் 11/FEB/1935 இல் திரு.திருமதி சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அருமை மகளாய் சிவபாக்கியம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் நமசிவாயம் செல்லையா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சண்முகதாசன், நிர்மலாதேவி, ஜெகதீசன், சிவநேசன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து விமலேஸ்வரி, தர்மலிங்கம், ஞானாம்பிகை, கோமளாதேவி போன்றவர்களைத் திருமணம் முடித்து சதீசன் சாரதா, அருணேசன் அமரகவி, அரவிந்தன் மைதிலி, பார்த்திபன் பிரியா, தர்மினி தயா, கரிகாலன், துஸ்யந்தன் சாரு, சாரங்கன் மேனகா, செந்தூரன் சர்மிதா, மயூரன் நிஜந்தா, சரண்ஜா தாஸ் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், சரண், சஞ்ஜே, அஜே, அருவி, அஷ்வின், ஆரவி, ஆருஷ், அரிஷ், இசைஞன், இசானி, இனுஷன், தாரகி, தர்வின், வர்ஷன், வர்ஷானி, வர்ஷ்ரின், அஷ்வின், அனோஷ், அமிஷா, அனிஷ் போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 12.08.2019 இல் 84 வயதில் வவுனியாவில் உள்ள தவசிக்குளத்தில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
பூநகரி மண்ணின் பூங் கொத்தே
தேன் மனம் கொண்ட தென்றல் காற்றே
வான் புகழ் ஓங்கி வையகம் காத்து
மாங்கனி போல் மனதில் இனித்து
நந்தவன பூவாய் நறுமணம் வீசி
விடை பெற்றீரே எமைப் பிரிந்து
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

