ஆறுதல்

நன்றி நவிலல்

செல்லையா தெட்சணாமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா தெட்சணாமூர்த்தி

Retired Civil Engineer

வயது 8214 ஜனவரி, 1937 – 8 ஜூலை, 2019

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
Streatham Vale

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் துயரச் செய்திகேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் கூறி எம் துயரில் பங்கு கொண்டவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்துக் கொண்டவர்களுக்கும், சகல வழிகளிலும் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் நெல்வயலும் படித்த மக்களை கொண்டதும்,ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என அழகிய உரும்பிராய் தெற்கில் 14/JAN/1937 இல் திரு.திருமதி செல்லையா இராசம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.தெட்சணாமூர்த்தி அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சுப்பிரமணியம், கணேசலிங்கம், சோமசுந்தரம், சத்தியமூர்த்தி போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் நவாலி வடக்கை சேர்ந்த திரு திருமதி நடராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகள் யோகேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக மனோச், மோகன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து நிஷா என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் Civil Engineer ஆக கடமையாற்றி ஓய்வுபெற்றதுடன் இவர் தன்நலமற்ற சமூக சேவையாளரும்,எல்லோர் நெஞ்சங்களிலும் அழியாத அன்பை விதைத்தவர். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08.07.2019 இல் 82 வயதில் பிரித்தானியாவில் உள்ள Streatham vale நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

”எங்கும் நிறைந்த எங்கள் தங்கம்
தங்கக் குணமே தந்தை உருவே
உருக்கம் கொண்ட உத்தம உறவே
உறவாய் வாழ்ந்து நிறைவாய் நிலைத்து
நிலைதடம் தொட்டு தொழுதோம் மனதில்”

பிற அறிவித்தல்கள்

  1. 12 ஜூலை, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.