மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வநாயகம் கமலநாதன்
இளைப்பாறிய வடபிராந்திய செயலாற்று முகாமையாளர் - இலங்கை போக்குவரத்துச்சபை
வயது 706 டிசம்பர், 1948 – 5 மே, 2019
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- துன்னாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் கமலநாதன் அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம்(குலம்) இராசம்மா(நீர்வேலி) தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் இலட்சுமியம்மாள் தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிசாந்தி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- யாழ் மாவட்ட செயலகம்), கிரிதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மநாதன்(இளைப்பாறிய அதிபர் அத்தியார் இந்து கல்லூரி- நீர்வேலி, மத்திய கல்லூரி- யாழ்ப்பாணம்), செல்வநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரும்,
விக்கினேஸ்வரன்(சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்), ஜசிந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வேணுசன், டானிகா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
மணிலால்தேவி(இலங்கை), சிவதர்சினி(லண்டன்), ராஜலட்சுமி(இலங்கை), காசிதாஸன்(துபாய்), ஜெயலக்ஷமி(லண்டன்), சிவசுப்பிரமணியம்(ஆனந்தன்-லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணியளவில் ஓடக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
கமலநாதன் வரலாறு:-
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் நெல்வயல்களும், மிளகாய்ச்செடிகளும், வெங்காய வயல்களும், மரக்கறித் தோட்டங்களும், பழவகைகள், பயன்தரும் மரங்கள் என செழிப்பு மிகுந்த நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியில் 06-12-1948 இல் செல்வநாயகம் இராசம்மா தம்பதிகளுக்கு சிரேஷ்ட புதல்வனாய் கமலநாதன் அவர்கள் பத்மநாதன், செல்வநாதன் ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் வேலும்மயிலும் இலட்சுமியம்மாள் தம்பதிகளின் அன்பு மகள் ராஜேஸ்வரி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கிரிசாந்தி(அபிவிருத்தி உத்தியோகத்தர் யாழ்-மாவட்ட செயலகம்), கிரிதரன் எனும் அழகுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததுடன் விக்கினேஸ்வரன்(சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ்.பல்கலைகழகம்), ஜசிந்தா ஆகியவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்புடன் செய்ததுடன், வேணுசன், டானிகா ஆகிய பேரப்பிள்ளைகளை அணைத்து மகிழ்ந்தார்.
மேலும் இலங்கைப் போக்குவரத்துசபை வடபிராந்திய செயலாற்று முகாமையாளராக சேவையாற்றி ஓய்வு நிலை அடைந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன், இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05-05-2019 இல் 70 வயதில் துன்னாலை வடக்கில் இறையடி எய்தினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
கடமை வீரன்
காலத் தேவன்
கருணை அழகன்
கருத்துள்ளம்
காலக் கணிப்பன்
கதை பேசும் மன்னன்
காலன் அழைத்தான்
கலங்கி அழுகிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

