1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வநாயகம் ரட்ணம்
Land Development Department, Sri Lanka
வயது 8412 ஜனவரி, 1935 – 19 ஜூன், 2019
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் ரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையின் மறு உருவமே!
ஓராண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர்
இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு உறவாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும்,வாழைத்தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த உரும்பிராயில் 12/Jan/1935 இல் திரு.திருமதி ரட்ணம் கண்ணம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.செல்வநாயகம் அவர்கள் தங்கராஜா,கனகம்மா போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு திருமதி செல்வரட்ணம் ஞானமணி தம்பதிகளின் அன்பு மகள் றதினா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வத்சலா, சுலோஜனா, சியாமளன், சுமித்திரன், செல்வகுமார், வாசுகன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று பண்பாக வளர்த்து கண்ணன், மனோரஞ்ஜன், ராஜி, மலர், சோபனா, காயத்திரி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து அழகுப் பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இலங்கையில் Land Development Department இல் நிறைந்த சேவை ஆற்றியதுடன் கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 19.06.2019 இல் 84 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
உரும்பிராய் தந்த உத்தம வீரனே
அரும்பாய்த் தோன்றி விருட்சமாய் மாறி
கரும்பு போல் இனிமையான மனதுடன்
காலத்தில் வாழ்ந்து ஞாலத்தில் நிலைத்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

