மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வபாக்கியம் ஞானதீபம்
வயது 852 ஜனவரி, 1934 – 26 ஜூன், 2019
- பிறந்த இடம்
- குருநாகல்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇலங்கை குருநாகலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Kipling ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வபாக்கியம் ஞானதீபம் அவர்கள் 26-06-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா ஞானதீபம்(குருநாகல், கனடா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவஜோதி(கொழும்பு), செல்வஜோதி(கனடா), பரம்ஜோதி(கனடா), தவஜோதி(கனடா), அருள்ஜோதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மயூரி(UK), கீதா(கனடா), ஷெமி(கனடா), சுபா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பூஜா, அஞ்சலி, தனுஜா, அர்ஜுன், அஞ்சன், துசேன், நிசான், ரோசான் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையில் அழகிய இடமும் வடமேல் மாகாணத்தின் தலைநகரமும்,தெங்கு முக்கோணவலயம் அமைந்துள்ள இடமும் மூவின மக்களும் சேர்ந்து வாழ்வதுடன் பண்டைய இராசதானிகளின் ஒன்றின் தலைநகரமான குருநாகலில் 02/Jan /1934 இல் செல்வபாக்கியம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் அறிவு நிறைந்த ஆண் மகனான செல்லையா ஞானதீபம் அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சிவஜோதி, செல்வஜோதி, பரம்ஜோதி, தவஜோதி, அருள்ஜோதி போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மயூரி, கீதா, ஷெமி, சுபா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பூஜா, அஞ்சலி, தனுஜா, அர்ஜின், அஞ்சன், துசேன், நிசான், ரோசான் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அத்துடன் ராஜேஸ்வரி என்றும் அழைக்கப்படும் இவர் சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 26.06.2019 இல் 85 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அன்புடன் அணைத்த அன்னையே
பண்புகள் புகட்டிய உயர் குருவே
இன்மைகள் கூட்டிய என் உறவே
வெண்மை உருவே பன்மை விரும்பியே
வண்ண அழகே வாசல் செடியே
எம்மைப் பிரிந்தாய் ஏங்க வைத்தாய்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

