மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராசா ஜெயபாலன்
வயது 7411 ஜனவரி, 1945 – 31 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Frankfurt Am Main
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி Frankfurt Am Main ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா ஜெயபாலன் அவர்கள் 31-08-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராசா, தங்கமுத்து(பவளம்) தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், கிருஸ்ணபிள்ளை சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வக்குமார், சுரேஸ்குமார், ஜெயந்தி, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஜினி, உசாநந்தினி, கனகராசா, கல்யாணி, பாமதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரசாந், மதுஜா, சயந், நிலுஜா, தனுஜன், அரோன், திவ்யா, சாரபி, மதுமிதா, சரண் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தர்மராஜா, மகேந்திரம், தங்கத்துரை, செல்வராணி, முத்துமலர், தங்கவேல், காலஞ்சென்ற அன்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கவேலாயுதம், ரவீந்திரன், ராசேந்திரம், புவனேந்திரம், காலஞ்சென்ற நீதிராசா, பத்மராணி, அம்பிகா, சாந்திமதி, சாந்தினி, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜன், பிரியா, ஜெயகனேஸ், பிரகாஷ், நரேஷ், சுஜேந்திரா, கிரிசாந்தன், தர்மினி, தர்ஷன், பரிமளா, பிறேமா, பிரபாகரன், தயாபரன், நிர்மலா, ரதிதேவி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
தர்சினி, முத்துக்கிருஸ்ணன், கிருஸ்ணானந்தன், அனந்தன், கார்த்திகா, சிந்து, சித்திரா, ஜெயராணி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறையில் 11/JAN/1945 இல் திரு.திருமதி செல்வராசா தங்கமுத்து(பவளம்) தம்பதிகளின் அன்புப் புதல்வனாக திரு.ஜெயபாலன் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தர்மராஜா, மகேந்திரம், தங்கத்துரை, செல்வராணி, முத்துமலர், தங்கவேல், அன்னராசா போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் கிருஸ்ணபிள்ளை சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகள் செல்வராணி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து செல்வக்குமார், சுரேஸ்குமார், ஜெயந்தி, ராஜ்குமார் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ரஜினி, உசாநந்தினி, கனகராசா, கல்யாணி என்பவரை திருமணம் முடித்துவைத்து பிரசாந், மதுஜா, சயந், நிலுஜா, தனுஜன், அரோன், திவ்யா, சாரபி, மதுமிதா, சரண் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உடன்பிறப்புகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 31.08.2019 இல் 74 வயதில் ஜேர்மனியில் உள்ள Frankfurt am main நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
பருத்தி மைந்தனே
பாச உறவே
வருந்தி உழைத்த
வள்ளல் உறவே
தெருவில் நடந்தால்
தெரியாதார் யாருமில்லை
கருவிழிப் பார்வையை
கானாது தவிக்கிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

