மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வரட்ணம் சாந்தினி
வயது 5425 மே, 1964 – 29 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் சூளானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் சாந்தினி அவர்கள் 29-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சதீஸ்குமார், பாமினி, தர்சினி, ஜேந்தினி, சாந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யாழினி, சுரேஸ்குமார், கமலநாதன், ராம்தாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இலங்கை நாயகி, பத்மாவதி, சிவநேசம், நிர்மலாதேவி, ஈஸ்வரி, காலஞ்சென்ற வதனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜனேஸ், டேனுஷா, சாருஜா, கபிசன், அபிநயா, பிந்துசா, பிரவீன், சஸ்மிதா, அனோஜிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2019 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

