1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வரட்ணம் ரகுநாதன்
வயது 652 செப்டம்பர், 1953 – 8 ஜூன், 2019
- பிறந்த இடம்
- ஏழாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- Neuilly-Sur-Marne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-Sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வரட்ணம் ரகுநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று கடந்ததென்று
ஆண்டவனே உரைந்தாலும்
ஆறாது எங்கள் துன்பம்
நீங்கள் இங்கு இல்லாமல்
தங்கமென மனமும் கொண்டு
தனித்துவமாய் குணமும் உண்டு
சிங்கமென நடையும் கொண்டு
சீராக வாழ்ந்த எங்கள்- ஐயா
காணாமல் போவதற்கு
காலன் அழைத்து சென்றானோ?
மீளாத துயரமதில் நாங்கள்
விடிவு காணாது துடித்தாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடிடும் அன்பு மனைவி,
அன்பு சகோதரிகள்,
அன்பு பெறாமகன் ரமணன்
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், படித்த மக்களை கொண்டதும், பயன்தரு மரங்கள், நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த ஏழாலை வடக்கில் 02/SEP/1953 ஆம் ஆண்டில் திரு.திருமதி செல்வரட்ணம் அன்னம்மா தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.ரகுநாதன் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கலாநிதி, மதிராணி, பரம்சோதி, குலமணி, மனோறஞ்சிதம், தயாவதி, ரஞ்சிதராணி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி குமரேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகள் சந்திரமதி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக நல்ல பாதுகாப்பு இல்லாத நிலையினாலும் மேலும் போர் இறுக்கமடைய பிரான்ஸ் சென்று வாழ்ந்து வந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, உற்றார், உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08.06.2019 இல் 65 வயதில் பிரான்ஸ்ஸில் உள்ள Neuilly-sur-marne நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
”ஏழாலையில் பிறந்த
......எளிமைக் குணமே
பாழாகும் மனிதரை
......பண்பாக மாற்றி
வாழ்வில் ஏற்றிய
........வள்ளல் மனமே
அழகாக வாழ்ந்து
......அகிலம் துறந்தீரே”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

