1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சேனாதிராசா மனோன்மணி
10 ஜூன், 2015
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கந்தர்மடம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேனாதிராசா மனோன்மணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் ஆண்டு ஒரு நொடிப் பொழுதில் ஆனதம்மா
உங்கள் இழப்பை எம்மால் நம்பவே முடியவில்லை
ஓர் ஆண்டு கனப்பொழுதில் உருண்டோடி விட்டதம்மா
உங்கள் பிரிவு எம் மனதை வாட்டுதம்மா
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நடுவில்
விதி எங்கே எப்போது எந்த
உருவத்தில் நுழைந்தது என்று
யாருக்கு தெரியும் அம்மா
உங்கள் பிரிவுக்கும் அந்த காலன்
அவன் என்ன உருவத்தில் நுழைந்தானோ
எங்கள் அம்மாவின் உயிரைப் பறிப்பதற்கு
உங்கள் பிரிவுச் செய்தி இன்றும்
ஆணிவேராய் அடிமனதில் பதிந்ததம்மா
எங்களால் மறக்கவே முடியவில்லை
பொய்யான தகவலாய் இருக்க கூடாதா
என்று எம் மனம் ஏங்கியதுண்டு
உங்கள் பிரிவால் நிலை குலைந்து நிற்கின்றோம்
வார்த்தைகள் இல்லாத உங்கள்
வடிவம் கண்டோம் அம்மா
வர்ணிக்க முடியாத வார்த்தைகள் கண்டோம் அம்மா
அளவிட முடியாத உங்கள் அன்பு கண்டோம் அம்மா
சுயநலம் இல்லாத இதயம் கண்டோம் அம்மா
வெறுப்பை காட்டாத உங்கள்
கோபம் கண்டோம் அம்மா
இனி யாரையம்மா பார்ப்போம்
உங்களுக்கு நிகராய் யாருமே இல்லையம்மா
உங்களுக்கு ஈடினையாய்
உங்களுக்கு மக்களாய் பிறந்த பாக்கியம்
எங்கள் வாழ்வில் கிடைத்த இன்பம் அம்மா
அந்த இறைவனுக்கு நன்றியம்மா
நீங்கள் என்றென்றும் எங்கள்
இதயமதில் இணைபிரியா வாழ்வீர்கள்
உங்கள் பிரிவால் துயருறும்
சகோதரர்கள், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— றசிலா கேமதாஸ்(நோர்வே)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

