மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செந்திவடிவேல் நந்தகுமார்
வயது 4818 மார்ச், 1971 – 29 மார்ச், 2019
- பிறந்த இடம்
- நெல்லியடி
- வாழ்ந்த இடம்
- Croydon
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் குறோய்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செந்திவடிவேல் நந்தகுமார் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செந்திவடிவேல் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஸ்ரீஸ்கந்தராஜா செல்வமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
அக்ஷயா, துசாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வரத்தினம், சாந்தினி, காலஞ்சென்ற சாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவநீதன், சஜீவன், நிரோபாலினி, சுஜனியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாலினி, ஆஷா ஆகியோரின் சிறிய தந்தையும்,
அஸ்வின், அபினேஸ், அனுஷ்கா ஆகியோரின் பெரியப்பாவும்,
யஸ்வின், ஆசினி, லியானா, அதிஷா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் அழகான இடமும் படித்த சமுதாயங்களைக் கொண்டதும் அறிவு நிறைந்த இளைஞர் யுவதிகளைக் கொண்டதும், நெல்வயல்கள், வெங்காய வயல்கள், புகையிலைத் தோட்டம் என வளமிகு நெல்லியடியில் 18-03-1971 இல் செந்திவடிவேல் தங்கம்மா தம்பதிகளுக்கு அருமைப் புதல்வனாய் நந்தகுமார் அவர்கள் செல்வரத்தினம், சாந்தினி, சாந்தன் ஆகிய உடன் பிறப்புகளுடன் இத் தமிழர் பூமியில் அவதரித்தார்.
மேலும் ஆளுமையும் அறிவும் நிறைந்த இவர் வளர்ந்து உயர் நிலை அடைந்து அழகிய வாலிபனானதும் ஸ்ரீஸ்கந்தராஜா செவ்வமலர் தம்பதிகளின் அழகு மகள் விஜிதா அவர்களை திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து அக் ஷயா, துசாரா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கடின உழைப்பாளியாகவும் வாழ்வில் நற் பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இவர் உதவிடும் வள்ளலாக விளங்கியதுடன்,நகைச்சுவை ததும்ப நண்பர்களுடன் பேசுவதில் திறமையானவராக திகழ்ந்தார்.
இவ்வாறு மனைவி பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 29.03.2019 இல் 48 வயதில் லண்டனில் உள்ள Croydon நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
"அன்பு உறவே
பாச உயிரே
நேச மலையே
நிம்மதி மூச்சே
நல்லதை நினைக்கும்
நன்மை உறவே
தவிக்க விட்டுத்
தள்ளிப் போனதேனோ"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

