அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செந்தூரன் ராஜேந்திரன்
வயது 438 ஜனவரி, 1976 – 20 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- கரம்பன் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Luzern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செந்தூரன் ராஜேந்திரன் அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜநாயகம், அன்னபூரண் தம்பதிகள், முத்துசாமி சற்குணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ராஜேந்திரன், ரோகிணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சிவபுண்ணியமூர்த்தி முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருஜாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, புரூணசகி, கஸ்தூரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகலிங்கம், செல்வமோகன், நிஷான், கஜரூபன், ருஜிதா, அர்ஜுனா, வினோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யதூஷானி, பானு, சாருஜா, சிவசுருதி, அபிஷாயினி, சிவகார்த்திகன், விதுர்ஷனா, கிஷானா ஆகியோரின் மாமனாரும்,
ஷாலினி, ரமணா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்.கரம்பனில் புகழ் பூத்த சீமான் திரு.ராஜேந்திரன் அவர்தம் பாரியார் ரோகிணிதேவி அவர்களின் அருமைப் புத்திரனாக 08/JAN/1976 ஆம் ஆண்டில் திரு.செந்தூரன் அவர்கள் வாசுகி, புரூணசகி, கஸ்தூரி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இராஜநாயகம் அன்னபூரண்/முத்துசாமி சற்குணம் போன்றவர்களின் பேரனாக மடிமீது தவழ்ந்து வளர்ந்து இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன் திரு.சிவபுண்ணிய மூர்த்தி முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகள் ருஜாந்தி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், நல்லுள்ளம் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி,உற்றார்,உறவினர் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 20.07.2019 இல் 43 வயதில் சுவிஸில் உள்ள Luzern நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
""குல விளக்கே
.....கோவில் சிலையே
குங்கும நிறமே
......குல தெய்வமே
அறிவின் ஊற்றே
....அன்பு மனமே
அன்பாய் பேசி
....அகிலம் துறந்தீரே.""
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

