ஆறுதல்

மரண அறிவித்தல்

சேது மகேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சேது மகேஸ்வரி

வயது 7317 செப்டம்பர், 1946 – 31 அக்டோபர், 2019

பிறந்த இடம்
பூந்தோட்டம்
வாழ்ந்த இடம்
மகாறம்பைக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சேது மகேஸ்வரி அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அர்ச்சுணன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சேது அவர்களின் அன்பு மனைவியும்,

மங்களேஸ்வரி, காலஞ்சென்ற சேது இரவீந்திரன்(பூசாரவி- புணர்வாழ்வு கழகத்தின் தலைவர்), ஜெயமணி(மாலா- திருகோணமலை), மகிழ்ந்தினி(மஞ்சு- வவுனியா), சுவீந்திரன்(லண்டன்), நர்மதன்(மகாறம்பைக்குளம்), சாந்திமலர்(பண்டாரிகுளம்), மயூரன்(மகேஸ்வரன் -பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகராஜா(சது சேவிஸ் ஸ்டேஸன்- மகாறம்பைக்குளம்), மயில்வாகனம்(ஆளுநர் திணைக்களம்-திருகோணமலை), நாகராஜா(மாவட்டச் செயலகம்- வவுனியா, மத்தியஸ்தர் அறிவிப்பாளர்- வவுனியா), இராஜேஸ்வரி(ராஜி- லண்டன்), விக்கினேஸ்வரன்(நீதிமன்ற உத்தியோகத்தர்- வவுனியா), வேனுகா, புனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், நாகராஜா(நாவற்குளம் ஓமந்தை), செல்லம்மா மற்றும் இராஜேஸ்வரி(பூந்தோட்டம்), காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரிந்துஜா(ஐக்கிய அமெரிக்கா), திவ்வியா(திருகோணமலை), அபிலாஷினி(லண்டன்), திவ்வியரூபன்(கனடா), திலக்‌ஷன்(ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்- திருகோணமலை), தனுஸ்காந், லுக்‌ஷிகா, பிரகாசினி, விலோசன், சதுர்ஷா, சபிசன், டனுக்‌ஷா, தக்‌ஷன், டினேசி, பவிஸ்லா, சுலோஜனன், சுவேனி(லண்டன்), சுவீசன்(லண்டன்), சிரிசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ரியா, ஆதிரா(ஐக்கிய அமெரிக்கா), கர்சிதா, திக்சனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மனியளவில் மகாறம்பைக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் வடக்கில் தமிழர் பகுதியும் குளங்கள் நிறைந்த இடமும் வனப்பு மிகுந்த இடமுமான வவுனியா பூந்தோட்டத்தில் 17/SEP/1946 ஆம் ஆண்டில் திரு.திருமதி அர்ச்சுணன் பொன்னம்மா தம்பதிகளுக்கு அழகுக் குழந்தையாக மகேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பொன்னம்பலம், நாகராஜா, செல்லம்மா, இராஜேஸ்வரி, அன்னலட்சுமி ஆகிய உடன்பிறப்புகளுடன் குறும்பு செய்து வளர்ந்து பெரியவளாகியதும், அழகிய ஆண் மகன் சேது எனும் வீரம் நிறைந்த ஆண் மகனை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.இருவரின் வாழ்க்கைப் பயணத்தில் வம்ச விருத்தியாக மங்களேஸ்வரி, சேது இரவீந்திரன், ஜெயமணி, மகிழ்ந்தினி, சுவீந்திரன், நர்மதன், சாந்திமலர், மயூரன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து

முழுக் கதையையும் வாசிக்க

பிள்ளைகள் பெரியவர்களானதும் நாகராஜா, மயில்வாகனம், நாகராஜா, இராஜேஸ்வரி, விக்கினேஸ்வரன்,வேனுகா,புனிதா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து ரிந்துஜா, திவ்வியா, அபிலாஷினி, திவ்வியரூபன், திலக்ஷன், தனுஸ்காந், லுக்ஷிகா, பிரகாசினி, விலோசன், சதுர்ஷா, சபிசன், டனுக்ஷா, தக்ஷன், டினேசி, பவிஸ்லா, சுலோஜனன், சுவேனி, சுவீசன், சிரிசா போன்ற பேரப்பிள்ளைகளுடனும் ரியா, ஆதிரா, கர்சிதா, திக்சனா எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 31.10.2019 இல் 73 வயதில் மகாறம்பைக்குளத்தில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

பூந்தோட்டக் கிளியே பூவிதழ் அழகே
வந்திடும் வசந்தம் வாழ்த்தும் பேச்சில்
கந்தன் அழகு கவரும் வதனம்
உந்தன் மடியில் உறங்க வேனும்
தலைவைத்து எந்தன் உயிரே எங்கே போனீர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.