மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் கணேசதாசன்
ஓய்வுதிய உடற்கல்விப் பணிப்பாளர்- வவுனியா
வயது 7320 டிசம்பர், 1945 – 25 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நெளுக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் கணேசதாசன் அவர்கள் 25-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம்(அதிபர்) முத்துப்பிள்ளை(ஆசிரியர்) தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொண்ணம்பலம்(பதிவாளர்) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வமணி(ஓய்வுதிய திட்டமிடல் முகாமைத்துவ உதவியாளர், வவுனியா) அவர்களின் அன்புக் கணவரும்,
சாமினி(கனடா), உஷாநந்தினி(கனடா), திரிபுரகார்த்திகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிதரநாதன்(கண்ணன்- கனடா), சதீஸ்குமார்(கனடா), கார்த்தீபன்(ஆசிரியர்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்வாதாரணி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
துஸ்யந்தினி(கனடா) அவர்களின் அன்பு பெரியப்பாவும்,
இரா.ஜெயசீலன்(கனடா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஹன்சியா, அபூர்வன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 29-04-2019 திங்கட்கிழமை மு.ப 11:00 மணியளவில் நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபையில் நடைபெற்று பின்னர் நெடுந்தீவு கிழக்கில் உள்ள சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், தீவுக்கூட்டங்களில் பெரிய தீவும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தில் 20-12-1945 இல் அதிபராக கடமையாற்றிய சண்முகம் முத்துப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் கணேசதாசன் அவர்கள் சர்வாதாரணி ஆகிய உடன் பிறப்புடன் ஏக புத்திரனாக இவ் அழகு நிறைந்த தீவில் அவதரித்தார். மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் பதிவாளராக சேவை செய்த பொண்ணம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அழகுப் பெண்ணான வவுனியாவில் ஓய்வூதிய திட்டமிடல் முகாமைத்துவ உதவியாளரான செல்வமணி அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக சாமினி, உஷாநந்தினி, திரிபுரகார்த்திகா போன்ற அழகுப் பிள்ளைகளைப் பெற்று அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார்.
இவர் வவுனியா தெற்கு வலய உடல்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு நிலை அடைந்ததுடன் ஐக்கிய இராச்சிய நெடுந்தீவு ஒன்றியத்தின் முக்கிய செயற்பாட்டாளராக தீவின் வளர்ச்சிக்காக பல்வேறு வழியிலும் சத்தமின்றி உழைத்த பெருமகனாகவும், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 25.04.2019 இல் 73 வயதில் வவுனியா உள்ள நெளுக்குளத்தில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
முழுக் கதையையும் வாசிக்க
"நெடுந்தீவு மண்ணில்
......நிலைத்த மகனே
கவலை மறந்து
.......சிரித்து மகிழ்ந்த
அன்பு உறவே
.....அழகிய உருவே
கடமை துறந்து பிரிந்ததால்
......கவலைகள் தந்தீர் மனதினில் "
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

