1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் இராசேந்திரம்
வட்டக்கச்சி ஸ்ரீ நாகதம்பிரான் கோயில் உருவாகுவதற்கு வித்திட்டவர்
வயது 7610 மார்ச், 1943 – 2 மே, 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி, கனடா, கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா, கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் இராசேந்திரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
அன்புள்ளங்கொண்ட பண்பாளனே!
உன் உறவுகளுக்கு நல்ல சொந்தம் நீ!
ஊரில் எல்லோருக்கும் நல்ல நண்பன் நீ!
நம் உயிரிக்கும் மேலானவரே நீங்கள் எம்மை
விட்டுப் பிரிந்து சென்ற ஓராண்டும் உங்களை
ஒரு நொடியும் நாம் மறந்ததில்லை!
உங்கள் அன்பு முகம் காண துடிக்கின்றோம் உம் பிரிவால்!
என்றுமே உமது நினைவுகள் எமை விட்டு நீங்காது!
என்றும் மாறாத நினைவுகளுடன் வாழும் மனைவி,
அருமை மகன், குடும்பத்தினர்கள், சகோதரர்கள்,
மைத்துனர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!
எங்கள் அன்பு தெய்வத்தின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்து எமது துக்கத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், தொலைபேசி, சமூக வலைத்தளங்களிலும் ஆறுதல்களைத் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள்,மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவில் 10/FEB/1943 இல் சண்முகம் கற்பகம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் இராசேந்திரம் அவர்கள் நேசம்மா, இராசம்மா, கனகேஸ்வரி, கமலாவதி, மகேஸ்வரி, சரஸ்வதி, மனோன்மணி, புனிதவதி, பரமேஸ்வரி, மகாலட்சுமி ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் வல்லிபுரம் பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகள் யோகலட்சுமி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சிவனேந்திரன் எனும் ஒரே ஒரு அழகுப் பிள்ளையை பெற்று வளர்த்ததுடன், விஜிதா என்ற பெண்ணுக்கு திருமணம் முடித்து வைத்து ஆரணி, அநிசா ஆகிய பேரப்பிள்ளைகளை தூக்கி முத்தமிட்டு இன்புற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் போர்காலத்தில் இடம் பெயர்ந்து வட்டக்கச்சியில் பல காலம் வாழ்ந்ததுடன்,இவர் உடையாராகவும் செயற்பட்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளை,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 02.05.2019 இல் 76 வயதில் கொக்குவிலில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
புங்குடுதீவு மைந்தனே
......புகழ்பூத்த உள்ளமே
கிராமத் தலைவனே
......கிழக்குச் சூரியனே
அன்பு உள்ளமே
.....அழகிய உருவே
உங்கள் நினைவால்
......ஊரே அழுகிறது
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

