31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் விமலராணி
வயது 5714 அக்டோபர், 1951 – 5 அக்டோபர், 2009
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅத்தியடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் விமலராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், மகேஸ்வரன் தம்பதிகளின் புதல்வியும், ஆசிரியர் சண்முகத்தின் அன்பு மனைவியும்,
ஆசிரியை ஜெயந்தி, பல்கலைக்கழக மாணவன் ஜெயகிருஷ்ணாவின் அன்புத்தாயாரும்,
ஆசிரியர் முரளியின் மாமியாரும், உமாதேவியின் மைத்துனியும்,
கருணா, காலஞ்சென்ற றாதா, லலி, சாரதா, உருத்திரன், றதி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
யாழ்நகரில் மருத்துவமனையில் அனுமதித்திருந்த அவளது அரும்பெரும் உயிர் 2009ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் திகதி மாலை 5:00 மணியளவில் மண்ணுலகைப் பிரிந்து விண்ணுலகம் சென்றடைந்தது.
ஈழத்தமிழ் நாடாம் யாழ்ப்பாணம் தலைநகரில்;
அங்கே அமைந்திருக்கும் அத்திமுளைத்திருந்த
அத்தியடியில்; அவதரித்த ஓர் அரும் பெண்
இங்கே வாழ்ந்திருந்தாள்; ஐய்யோ!
அழிவுவந்து இப்போ சாம்பலாகி விட்டதே!
கோவில் இல்லாத மகிழ்ச்சி; தோட்டத்தில்
இல்லாத இதமை; ஆர்ப்பாட்டத்தில் இல்லாத
கிளர்ச்சி; ஒன்றாய் யாவும் தந்த உயிர்,
தோற்றம் இளந்து இன்று நம்மை மாதுயரில் ஆழ்த்தியதே!
இன்று அவள் இல்லை, அவள் உயி்ர் இல்லை,
அவள் உடல் இல்லைல, சாம்பல் கூட மண்ணாகிவிட்டது!
யாவரும் கதிகலங்க அத்தப் புனிதஉடல்
விட்டு அவளது உயிர் பின்வரும் நாள்
பிரிந்து வேறு உலகம் அடைந்ததுவே!
ஆலமரம் சரிந்தது, பூமியே வெடித்ததோ!
கடல் கொந்தளித்தது, நாடு நிலம் அழிந்ததோ!
ஆதவனே இல்லாமல், படுஇருள் சூழ்ந்ததோ!
"விமலா" எங்கள் குடும்ப விளக்கு
உன் மறைவால் உன் குடும்பம், சுற்றம் நிலை தடுமாறுதே!
முடிந்தது, முடிந்தது; நடந்தது, நடந்தது;
அழுது புலம்புங்கள்; ஆனால் தைரியத்தை இழக்காதீர்கள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

