ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகநாதன் புவனேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகநாதன் புவனேஸ்வரி

வயது 7915 மார்ச், 1940 – 31 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
Killinochchi, பரிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் புவனேஸ்வரி அவர்கள் 31-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், கதிரேசு சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தி, சித்திரா, ஜெயந்தி, கஜன், கவிதா, கண்ணாளன், காஜத்ரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருபா, அருள்நேசன், ரகிதரன், வரதன், நேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நவமணி, கர்ணன், பகவதி, சசிரேகா, விமலதாசன், விமலராணி, கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பொன்னம்பலம், நல்லம்மா, சுப்பிரமணியம், நாகரட்ணம், கனகசபாபதி, மகேஸ்வரி, சதாசிவம், மயில்வாகனம், பரமேஸ்வரி, மகாலிங்கம், கந்தசாமி, சண்முகலிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தையல்நாயகி, கணபதிப்பிள்ளை, இராமலிங்கம், இராஜேஸ்வரி, நாகேஸ்வரி, நவமணி, பிரணவ சொரூபி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

அவினா, கிருத்தி, மாதவன், மேகலைவன், முகிலவன், ராகவன், துளசிகன், அர்யுன், வடிவு, அருணி, பார்தா, ஸ்ரீராம், நிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 15 /MAR/1940 இல் கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளாய் புவனேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.
நவமணி, கர்ணன், பகவதி, சசிரேகா, விமலதாசன், விமலராணி, கௌரி போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.

இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் கதிரேசு சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனான சண்முகநாதன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சாந்தி, சித்திரா, ஜெயந்தி, கஜன், கவிதா, கண்ணாளன், காஜத்ரி எனும் பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து கிருபா, அருள்நேசன், ரகிதரன், வரதன், நேசன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்துவைத்து அவினா, கிருத்தி, மாதவன், மேகலைவன், முகிலவன், ராகவன், துளசிகன், அர்யுன், வடிவு, அருணி, பார்தா, ஸ்ரீராம், நிலா எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதில் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவ்வாறு கணவர், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 31.08.2019 இல் 79 வயதில் பிரான்ஸில் காலமானார்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.