ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு23 ஜனவரி, 1936
இறப்பு1 அக்டோபர், 2019
முத்துக்குமாரு சண்முகசுந்தரம் அவர்களின் படம்

முத்துக்குமாரு சண்முகசுந்தரம்

வயது 83, இளைப்பாறிய யாழ் மாவட்ட முகாமையாளர்- இலங்கைவங்கி

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
தெஹிவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிறவுன் வீதி, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சண்முகசுந்தரம் அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு தையலம்பாள் தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்றவர்களான கோவிந்தராஜா கெளரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சண்முகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பார்த்திபன், ஜெயஸ்ரீ, சாருமதி, ஸ்ரீகுமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செண்பகலெட்சுமி, காலஞ்சென்ற திவ்வியமணி, ரகுநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயரூபி, ஜெயகரன், தனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தையா, ஜெகதீசன், ஜெகநாதன், ஜெகன்மோகன், சந்திரமோகன், ராஜமோகன், தேவிகாராணி, சந்திரகலா, ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரம்யா, மதுரா, சேந்தன், பிரவீன், ஆதர்சினி, ஆரபி, அபிஷா, அனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ந.ப 12.00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 01:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாணத்தின் அளவெட்டியில் 23/JAN/1936 ஆம் ஆண்டில் திரு.திருமதி முத்துக்குமாரு தையலம்பாள் தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.சண்முகசுந்தரம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் செண்பகலெட்சுமி, திவ்வியமணி, ரகுநாதன் போன்ற உடன்பிறப்புகளுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி கோவிந்தராஜா கௌரியம்மா தம்பதிகளின் அன்பு மகள் சண்முகராணி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

இருவரின் இன்ப வாழ்க்கையின் பயனாக பார்த்திபன், ஜெயஸ்ரீ, சாருமதி, ஸ்ரீகுமரன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஜெயரூபி, ஜெயகரன், தனுஷா என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து ரம்யா, மதுரா, சேந்தன், பிரவீன், ஆதர்சினி, ஆரபி, அபிஷா, அனிஷா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் கடின உழைப்பாளியான இவர் இலங்கை வங்கி யாழ் மாவட்ட முகாமையாளராக சேவையாற்றி ஓய்வு பெற்றதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 01.10.2019 இல் 83 வயதில் கொழும்பில் உள்ள தெஹிவளை நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

“முத்துப் போன்ற முகாமையாளரே
சொத்தே எங்கள் சொந்த உறவே
பெத்து பெயர் வைத்து வளர்த்து
பத்திரமாக காத்து பாரில் மிளிர வைத்து
வித்தாக ஆகி விடைபெற்றுச் சென்றீரே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.