மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை
ஆயுர்வேத வைத்தியர்
வயது 9011 டிசம்பர், 1928 – 19 ஜூன், 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கல்வியங்காடு, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கு செங்குந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்கள் 19-06-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சௌந்தரவல்லி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சண் தயாபரன்(Realtor), சசிதரன், தயாளினி, சுபாஜினி, பரணிதரன், சுதர்சனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசிகலா, சுசித்திராதேவி, இரவீந்திரன், கருணாகரன், கோவர்த்தனி, பிரபாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சிவபாக்கியம், மனோன்மணி, மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மங்களேஸ்வரி, இராஜகுலேந்திரன், நளாயினி, சுலோஜனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுசன், அபிசன், ஹரிசன் மிதுஷா, அசோக் விக்ஷனா, ஆகாஷ், பிரகாஷ், கைலாஷ், தீபிகா, கீர்த்திகா, ஷாலினி இயலினி, சீரோன், கயல்மிதுன், அரோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கரவெட்டி கிழக்கு செங்குத்தரில் 11/DEC/1928 ஆம் ஆண்டில் திரு.திருமதி வேலுப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.சண்முகசுந்தரம் அவர்கள் சிவக்கொழுந்து, சிவபாக்கியம், மனோன்மணி, மாணிக்கவாசகர் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அழகு நிறைந்த இவர் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி இராசையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளான சௌந்தரவல்லி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து சண் தயாபரன், சசிதரன், தயாளினி, சுபாஜினி, பரணிதரன், சுதர்சனன் எனும் அருமையான பிள்ளையைப் பெற்று வளர்த்து சசிகலா, சுசித்திராதேவி, இரவீந்திரன், கருணாகரன், கோவர்த்தனி, பிரபாஜினி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனுசன், அபிசன், ஹரிசன் மிதுஷா, அசோக் விக்ஷனா, ஆகாஷ், பிரகாஷ், கைலாஷ், தீபிகா, கீர்த்திகா, ஷாலினி இயலினி, சீரோன், கயல் மிதுன், அரோன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் பரியாரியார் என ஊரவர்களால் அழைக்கப்படும் இவர் ஆயுர்வேத வைத்தியராக இருந்து சிறப்பாக சேவையாற்றினார். அத்துடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் வள்ளலும் ஆவார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 19.06.2019 இல் 90 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
தமிழர் வாழ்வின் கருணை ஒளியே
அல்லும் பகலும் சேவை மனமாய்
மருத்துவம் செய்து மனங்களை வெண்று
சுகமாய் வாழ பாதை காட்டி
சுழலும் பூமியாய் உலகைச் சுற்றி
மனங்களில் நிலைத்தீர் உயரிய நாமமாய்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

