நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகநாதன் சிதம்பரம் மெய்யன்
Director Shan - Sunshine Creations
வயது 7518 ஆகஸ்ட், 1943 – 30 ஜூன், 2019
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- Croydon
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"
எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகிய கிழக்கு மாகாணத்தில் தமிழர் தலைநகரமும் திருக்கோணேசரநாதர் அருள் பாலிக்கும் சிவபூமியுமான திருகோணமலையில் 18/AUG/1943 ஆம் ஆண்டில் திரு.திருமதி சிதம்பரம் மெய்யன் சின்னப்பிள்ளை தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.சண்முகநாதன் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி அருமைத்துரை அங்கயற்கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகள் கமலாதேவி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து மஞ்சுபாஷினி, கவினோபாஷினி, தாட்சாயினி, அனுதரணி எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து பெரியவர்களானதும் திருமணம் முடித்து வைத்து மதுமதி, இந்துமதி, மேக்னா, வைஷ்ணவ், விஷ்ணு, அமாயா, ஹரா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் Director shan-Sunshine Creations ஆக சேவையாற்றிய இவர் சிறந்த அறிவாளியும் அன்புள்ளம் கொண்டவருமான இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், பொது உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 30.06.2019 இல் 75 வயதில் பிரித்தானியாவில் உள்ள Croydon நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"இன்பத்தை நினைக்கும் இளகிய மனமே
துன்பத்தை எண்ணி துவழா உள்ளமே
வள்ளல் உயிரே வாழ்வின் நல் உள்ளமாய்
வாழ்ந்து உயர்ந்து மனங்களில் நிலைத்தீர்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

