மரண அறிவித்தல்

சிவநாதன் ஜீவரஞ்சினி
வயது 53
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS Road ஐ வசிப்பிடமாகவும், தற்போது கனடா Newmarket ஐ வாழ்விடமாகவும் கொண்ட சிவநாதன் ஜீவரஞ்சினி அவர்கள் 25-04-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம்(PTK Ratnam), சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான சிவகுரு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பவித்தா, நிவேதா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜீவராணி, அம்பிகாதேவி, யசோரதி, செந்தில்ரூபன், தருமரூபன், காலஞ்சென்ற ஜெகரூபி அவர்களின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரநாதன், கௌரிகாந்தன், சிவராசா, சிவதர்சினி, காயத்திரி, சண்முகநாதன், சிவலிங்கநாதன், மங்கயற்கரசி, காலஞ்சென்ற யோகநாதன், திருலிங்கநாதன், இலங்கநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

