நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சியாமளாதேவி பத்மநாதன்
வயது 7218 பிப்ரவரி, 1947 – 30 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கரம்பொன் மேற்கு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதுடன் யாழ்பாணத்திற்கு அருகில் உள்ள ஊர்காவற்துறை கரம்பொன் மேற்கில் 18/FEB/1947 ஆம் ஆண்டில் நொத்தாரிசு கந்தையா அரியலட்சுமி தம்பதிகளின் அழகுக் குழந்தையாக சியாமளாதேவி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கோமளாதேவி,ஸ்ரீகாந்தா,பத்மநிதி,ஸ்ரீதரன் போன்ற உடன்பிறப்புகளுடன் கூடி ஒன்றுபட்டு வளர்ந்து பெரியவளாகியதும்,திரு.திருமதி நாகலிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகன் பத்மநாதன் எனும் வீரம் நிறைந்த ஆண் மகனை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர்கள் இருவரின் வாழ்க்கைப் பயனத்தில் வம்ச விருத்தியாக திவாகரன்,ஜெயகரன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து தர்மிகா,டோனா என்பவரை திருமணம் முடித்து வைத்து கபிறியெல்லா,ஏட்றியெல்லா,ஜெறன்,ஜேடா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் ஜேர்மனியில் சிறிதுகாலம் வாழ்ந்ததுடன் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,
இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 30.10.2019 இல் 72 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
புன்னகைத் தாயே புது வசந்தமே
நின் அன்பில் நித்தம் திழைத்த
வண்ண மயிலே கால் வெள்ளியே
உம் பேச்சைக் கேட்க உருகுது மனம்
எம் அன்பே எங்கே போனீர்
நாம் மகிழ வந்திடு ஒருமுறை
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

