ஆறுதல்

மரண அறிவித்தல்

சுகந்தி மகேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுகந்தி மகேந்திரன்

வயது 6013 பிப்ரவரி, 1959 – 12 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகந்தி மகேந்திரன் அவர்கள் 12-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.பத்மநாதன் கமலாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற அரியரட்ணம், சிவகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேந்திரன்(SAM Master- Driving School- Montreal) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுபன்(சஜீவ்), மயூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரியங்கா, ஜேன் ஆகியோரின் அருமை மாமியாரும்,

Montreal ஐ சேர்ந்தவர்களான சூரியகுமார், பிறேம்குமார், ஜெயந்தி, நிமலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவமதி(லதா), காலஞ்சென்ற சுந்தரகுமாரி(லதா), ரவிச்சந்திரன்(நிகேஷ் பான்ஷி), நிலாந்தி, கலைவாணி(மலேசியா), கனடாவை சேர்ந்தவர்களான உமாராணி, முரளிதரன், மணிமாலா, மணிசேகரன்(சுவிஸ்), பாஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சாந்திநிகேதன், கதிர்காமநாதன் மற்றும் வசந்தி, சபாநடேசன், ஜெயந்தி, ரஜினி ஆகியோரின் அன்பு சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் சுன்னாகத்தில் 13/FEB/1959 இல் திரு.திருமதி Dr.பத்மநாதன் கமலாதேவி தம்பதிகளின் அருமை மகளாய் சுகந்தி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சூரியகுமார், பிறேம்குமார், ஜெயந்தி, நிமலகுமார் போன்ற சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி அரியரட்ணம் சிவகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகன் திரு.மகேந்திரன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சுபன், மயூரி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து பிரியங்கா, ஜேன் போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 12.08.2019 இல் 60 வயதில் கனடாவில் உள்ள Montreal நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

"புன்னகை முகமே புன் சிரிப்பே
இன்மொழிப் பேச்சே இளமை உருவே
இரக்க மனமே இளம் தென்றலே
இங்கே நாம் தவிக்க எங்கே போனீர்"

பிற அறிவித்தல்கள்

  1. 11 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.