மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிகாமணி தர்மலிங்கம்
வயது 8325 மார்ச், 1936 – 19 மே, 2019
- பிறந்த இடம்
- கரம்பன் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கரம்பன், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கரம்பொன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சிகாமணி தர்மலிங்கம் அவர்கள் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(வாமதேவன்) அவர்களின் அன்பு மனைவியும்,
நீலோசனி(நீலா),குணசீலன்(சீலன்), தவசீலன்(தவம்), பிரேமசீலன்(பபு), சுலோசனி(பபா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(செல்வம்), பசுபதி(ராசு), அழகம்மா(தங்கம்), மார்க்கண்டு, ரூபவதி(பூவும்) மற்றும் அமிர்தம்(குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவசோதிலிங்கம்(Adept Drivers Education), வசந்தமாலா(மாலா), புஷ்பலதா(லதா), வசந்தகுமாரி(வசந்தி), கணேசலிங்கம்(கணேஸ்) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, அன்னலட்சுமி, தியாகராஜா(கனகர்), ராஜகுமாரன், சச்சிதானந்தம், சகாதேவன், இரத்தினசபாபதி(செந்தில்) மற்றும் புனிதவதி(சரசு- இலங்கை), சிதரம்பரநாதன்(சிதம்பரம்) ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற ரூபி மற்றும் வியாழம்மா, விஜயலக்சுமி(கமலா) ஆகியோரின் சகலியும்,
சுதர்சன் - ஐஸ்வர்யா, சுகன்யா(Dottie)- சயந்தன், சோபிகா, சுஜன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
சஞ்சீபன், சாருகா, சரணிகா, ஷர்மிகா, ஷேலன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,
சித்தாரா, ஏவன், அரையன், பிறைசன் ஆகியோரின் செல்லப்பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,தெங்கு தோட்டம்,கடலுணவு,பயன்தரு மரங்கள்,மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த ஊர்காவற்துறை கரம்பன் கிழக்கில் 25/MAR/1936 ஆம் ஆண்டில் சுந்தரம் செல்லம் தம்பதிகளுக்கு அன்பு மகளாக சிகாமணி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் வைத்திலிங்கம், பசுபதி, அழகம்மா, மார்க்கண்டு, ரூபவதி, அமிர்தம் போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் முருகேசு யோகம்மா தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான தர்மலிங்கம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து நீலோசனி, குணசீலன், தவசீலன், பிரேமசீலன், சுலோசனி போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் மணி என்று அன்பாக அனைவராலும் அழைக்கப்படும் இவர் சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார்.
இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 19.05.2019 இல் 83 வயதில் கனடாவில் உள்ள Mississauga நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"மங்காத நிலவே
......மகிழ்வான உறவே
மஞ்சல் நிறமே
......பண்பு உள்ளமே
இரக்க குணமே
...... இனிமைப் பேச்சே
இங்கே நாம் தவிக்க
......எங்கே போனீர்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

