மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சைமன் விக்ரர்
கணக்காளர்- பெட்டா எசன்ஸ் சப்ளையர்ஸ்- யாழ்ப்பாணம், சென்ரல் எசன்ஸ் சப்ளையர்ஸ்- கொழும்பு
வயது 8011 டிசம்பர், 1936 – 19 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சைமன் விக்ரர் அவர்கள் 19-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை சைமன், சவிராசிப்பிள்ளை(தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இறப்பியேல்பிள்ளை(தம்பு), சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வியாற்றிஸ் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அலெக்ஸ்(குமார்- சுவிஸ்), டெஸ்மகுமார்(இத்தாலி), சாந்தி சிறாணிக்கா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வேதநாயகம்(காலஞ்சென்றவர்) அலோசியஸ்(நவம்- சுவிஸ்), றெஜினா சூசைதாசன்(சுவிஸ்), செலஸ்ரினா ஜோண் வெஸ்லி(செலஸ்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹரியற் எய்டன் அலெக்ஸ்(சுவிஸ்), விக்ரோரியா(விஜி), டெஸ்மன்(இத்தாலி), செல்வராஜா(மோகன்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற றோஸ் மணி வேதநாயகம், கமலா வேதநாயகம்(இலங்கை), புஸ்பராணி அலோசியஸ்(சுவிஸ்), சூசைதாசன்(காலஞ்சென்றவர்), ஜோண் வெஸ்லி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
எவிற்ரா அலெக்ஸ், வியோலா அலெக்ஸ், சன்றியா மோகன், சுவிங்ரன் மோகன், விஷோர் டெஸ்மன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 25-10-2017 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணிளவில் முகத்துவாரத்தில் உள்ள புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் திருப்பலி கொடுக்கப்பட்டு பின்னர் மாதம்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

