மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி சிவபாலேஸ்வரராஜா
ஒய்வுநிலை மருத்துவர் RMO- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்
வயது 7712 அக்டோபர், 1943 – 8 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- கந்தர்மடம், வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடம் அம்மன் வீதியைப் பூர்வீகமாகவும், பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவபாலேஸ்வரராஜா அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பதுமநிதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், கரைச்சிக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குருநாதப்பிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகுணவதி(ஒய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவஸ்கந்தராஜா(கந்தர்மடம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுந்தராம்பிகை அவர்களின் அன்பு மைத்துனரும்,
சஞ்ஜீவன்(Network Manager, AMW, Colombo), தயாளன்(Electrical Engineer, New Zealand) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுஷா, சட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நேசமணி கேதாரநாதன், மகேஸ்வரன், விமலேஸ்வரன், சிவகுருநாதன், சிவநாதன், குலநாதன், சக்திதேவி சிவகுமார், சுபத்திரதேவி மகேந்திரன், ஜெயநாதன், லலிதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜசீந்திரன், நேர்த்திகா, கெளதீசன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
கிரிஷாந், அதிபன் ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2021 செவ்வாய்க்கிழமை பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் 05:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

