மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிங்கராசா தவமணி
வயது 6727 மார்ச், 1950 – 16 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- கொக்கிளாய்
- வாழ்ந்த இடம்
- முள்ளியவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு கொக்கிளாயைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராசா தவமணி அவர்கள் 16-10-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவலோஜினி, சிவரூபன்(பிரான்ஸ்), தயாளினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவராசா(SVN- கனடா), நிர்மலாதேவி, சந்திரா, குலராணி, இரத்தினராசா(தனியார் பேருந்து உரிமையாளர்- முல்லைத்தீவு), தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கஜேந்திரன்(கராத்தே ஆசிரியர், சுகாதார பணியாளர்- முல்லைத்தீவு வைத்தியசாலை), சுகன்யா, சுசீலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராசமணி, இராசரத்தினம், சின்னமணி, காலஞ்சென்ற சிவராசா(முல்லையூரான்- டென்மார்க்), ஜெயலக்சுமி(கனடா), சுந்தரலிங்கம், விஜயபாலன்(தனியார் பேருந்து உரிமையாளர்- மல்லாவி), அற்புதராணி(உதவி மாவட்ட விலைமதிப்பீட்டாளர்- வடபிராந்தியக் காரியாலயம், யாழ்ப்பாணம்), றஞ்சனா(ஆசிரியை- றிபேக் கல்லூரி, சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மைதிலி(கனடா), பாரத்(கனடா), கிசோ(கனடா), தனுசன், தருண், மகீசன் ஆகியோரின் அன்பு மாமியும்,
தனரூபன், தமிழினி, செந்தூரன், மேகலா(பிரான்ஸ்), சயந்தன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கணேசன், சுபன், அபிசா, அயனா(கனடா), ஆருதி(கனடா), கிருசிகன், அகில்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தண்ணீரூற்று கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

