மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிங்கராயர் கிருபைராணி
வயது 721 அக்டோபர், 1946 – 27 ஜூன், 2019
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி, Saint-Etienne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி Civic Center ஐ வதிவிடமாகவும், பிரான்ஸ் Saint-Étienne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிங்கராயர் கிருபைராணி அவர்கள் 27-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யாக்கோப்பு, லுசியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிங்கராயர்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
றெஜினோல்ட்(பிரான்ஸ்), அனுலா(டென்மார்க்), கல்பனா(சுவிஸ்), சோபனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வில்வராஜ், புஸ்பராஜ்(இலங்கை), ரவீந்திரராஜ்(பிரான்ஸ்) மற்றும் பத்மராணி(இலங்கை), வரதராஜா(லண்டன்), ரகுராஜா(ஜேர்மனி) ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,
நிரஞ்சனா(பிரான்ஸ்), பீற்ரர்(டென்மார்க்), பிறேம்(சுவிஸ்), ஜெகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றெனுயன், றெனுஜா, றெவினா(பிரான்ஸ்), ஜெமிலா, ஜெனிக்கா, ஜெமிசன்(டென்மார்க்), ஆகாஸ், அக்சியன்(சுவிஸ்), ஒஸ்கார், ஒஸ்ரேவியா, ஒஸ்வின், ஒஸ்ரிகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் உரும்பிராயில் 01/OCT/1946 இல் திரு திருமதி.செல்லர் கனகம்மா தம்பதிகளின் புத்திரியாக கிருபைராணி அவர்கள் வில்வராஜ், புஸ்பராஜ், ரவீந்திரராஜ், பத்மராணி, வரதராஜா, ரகுராஜா எனும் சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு. திருமதி யாக்கோப்பு லுசியா தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான சிங்கராயர் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக றெஜினோல்ட், அனுலா, கல்பனா, சோபனா போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து நிரஞ்சனா, பீற்ரர், பிறேம், ஜெகன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து றெனுயன், றெனுஜா, றெவினா, ஜெமிலா, ஜெனிக்கா, ஜெமிசன், ஆகாஸ், அக்சியன், ஒஸ்கார், ஒஸ்ரேவியா, ஒஸ்வின், ஒஸ்ரிகா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் போர் காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி வட்டக்கச்சியில் சிறப்பாக வாழ்ந்ததுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தவர். இவ்வாறு கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் , உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 27.06.2019 இல் 72 வயதில் பிரான்ஸ்ஸில் உள்ள Lyon நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
உரும்பிராய் மண்ணின்
....... உயிரே
வருவோரை இன்முகமாக
........வரவேற்று
அன்பு மொழி பேசி
....... அரவணைத்து
இன்பமாக வாழ்ந்து மனம்
.........துடிதுடிக்கப் பிரிந்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

