ஆறுதல்

நன்றி நவிலல்

சிங்கராயர் தார்சீசியஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிங்கராயர் தார்சீசியஸ்

ஓய்வுபெற்ற அதிபர்- யாழ். புனித மரியாள் வித்தியாலயம் OLR

வயது 804 ஜூலை, 1939 – 11 அக்டோபர், 2019

பிறந்த இடம்
குருநகர்
வாழ்ந்த இடம்
குருநகர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இறைநெறி, மொழி, கலை, விளையாட்டுத்துறை, சமூக நலன் போன்ற பல துறைகளில் சாதுர்யம் காட்டும் ஒட்டு மொத்த யாழ்ப்பாணக் கரையோர மக்களின் ஒரே ஒரு எடுத்துக்காட்டு என நாம் துணிந்து கூறக் கூடிய புகழ் மிகு பெருமகனான திரு.சிங்கராயர் தார்சீசியஸ் மறைந்தார். அவரது பெருமைகளை முழுமையாகக் கூறுவதாயின் அது ஒரு வரலாற்று நூல் போல விரியும்.

குருநகரில் வாழ்ந்து மறைந்த ஜோண் சிங்கராயர், மரிய சலோமை இணையர்களின் மகனாகவும் கலைத் தாயின் செல்வனாகவும் 04.07.1939 அன்று இவர் பிறந்தார். உரிய காலத்தில் லீலாவதி அம்மையாரை மணந்து, ஆறு அருந்தவப் புதல்வர்களைப் பெற்று, அதில் இளைவரான அருட்பணி. நிரூபணை, குருவாக உருவாக்கியதன் மூலம் இணையருக்கு இறைநெறி மேல் இருந்த பக்தியை வெளிப்படுத்தினார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவருக்குக் கலை மேல், விளையாட்டுத்துறை மேல் இருந்த பற்று, பள்ளிப் பருவத்திலேயே வெளிப்பட்டது. விளையாட்டுத்துறை மேல் இருந்த நாட்டம் அவரை யாழ். உதைப்பந்தாட்ட வீரராகவும், அதன் செயலாளராகவும் உயர்த்தியது. தன் புகழ் நாடாத சமூக நலன் என்ற அவரது நல் உள்ளத்துக்கு அவரதுசமூகத்துக்காக உருவாக்கிய விளையாட்டுக் கழகமே சாட்சியாகிறது. அதன் போது அவரது வயது, எட்டி நடை பயிலும் வெறும் எட்டு வயது தான். இவ்வியப்பூட்டும் செய்தி அவரது ஆழுமைக்குக் கட்டியம் கூறுகிறது.

திருவாளர் சிங்கராயர் தார்சீசியஸ் அவர்கள் சிறந்த நாடக நடிகர், இயக்குனர், எழுத்தாளர். 15 வயதிலேயே இவரது நாடகங்கள் பல ஊர்களின் மேடைகளைக் கண்டன. கொழும்புத் துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இவர் நடித்து, இயக்கிய சேரன் செங்குட்டுவன், சோக்கிரடீஸ், ஓதல்லோ மற்றும் ஏரோதியாள் போன்ற பல நாடகங்கள் அரங்கேறின. குறிப்பாக ஏரோதியாளில் பெண் வேடம் ஏற்று நடித்த இவரது நடிப்பாற்றலின் மறு பக்கத்தைக் கண்டு அனைவரும் வியந்தனர். 1962இல் திருமலை புனித சூசையப்பர் கல்லூரியில் ஊதாரிப்பிள்ளை நாடகத்தையும், 1964இல் பொத்துவிலில் சிறுவர் நாடகத்தையும்,1966இல் திருமலை இறக்கக்கண்டி முஸ்லீம் வித்தியாலத்தில் கண்ணகி நாடகத்தையும் எழுதி, இயக்கி, நடித்து இஸ்லாமிய சமூகத்தின் பாராட்டையும் பெற்றார்.

முதலாம் தரப் பயிற்றப்பட்ட ஆசிரியராக 1960இல் களம் இறங்கி, 1978இல் முதலாம் தர அதிபர் தேர்வில் தன் திறமையைக் காட்டினார். அன்பினால் எல்லோரையும் வென்றார். கல்வியோடு ஒழுக்கத்தியும் ஊட்டினார். ஆசிரியர்களின் வான்மைக்கும், மாணவர்களின் மேன்மைக்கும் வழிகாட்டினார். தம் இறைநெறிக்கு இணையாக சைவ இறைநெறியும் தம் பாடசாலைகளில் வளர்வதற்கு ஊக்குவித்ததோடு, தம் கைப்பொருளைக் கூடக் கொடுத்து ஊக்குவித்தார். இவர் இயற்கை மீது கொண்ட காதலால் ஆண்டு தோறும் தமது பாடசாலையில் மரம் நட்டு விழாவை முன் நின்று செயற்படுத்தியதற்குச் சாட்சியாக இன்றும் அவை பூஞ்சோலைகளாகக் காட்சி தருகின்றன.

இவர் ஒரு சிறந்த வழிகாட்டு என்பதற்கு, இச்சமூகம் கொடுத்த பணிப் பொறுப்புகளே சான்று பகிர்கின்றன. இவர் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க யாழ். மாவட்டத் தலைவர், யாழ். உதைபந்தாட்டக் குழுச் செயலர், குருநகர் கலைகழகத் தலைவர், நாட்டுக்கூத்து மன்றத் தலைவர், நடன நல்லிசைக் கலாமன்றச்செயலர், முன்னேற்ற ஐக்கிய முன்னணிக் கல்விக் குழுத் தலைவர் மற்றும் புனித யாகப்பர் ஆலய பங்குப் பேரவைச் செயலர் எனப் பல பணிகளில் ஓய்வின்றி உழைத்தவர்.
உதைப்பந்தாட்ட - கரப்பந்தாட்ட வீரர், பயிற்சியாளர், சிறந்த தலைவர், கலாரசிகர், பேச்சாளர், கலைஞர் ஆகியவற்றோடு 34 ஆண்டு ஆசிரியப்பணியின் ஆற்றல், அர்ப்பணிப்பு, உழைப்பு, முகாமைத்துவத் திறன் என்பவற்றை விளக்கிக் கூறுவதாயின் அது நூலாகத் தான் ஆகி விடும் என்பது உறுதி.

பிற அறிவித்தல்கள்

  1. 12 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.