31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னக்கிளி இராசம்மா
வயது 833 மார்ச், 1926 – 12 செப்டம்பர், 2009
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை கம்பர்மலை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை கம்பர்மலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவல்வெட்டித்துறை கம்பர்மலை மணல்தெருவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னக்கிளி ராசம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற சின்னக்கிளி அவர்களின் அன்புமனைவியும், செளந்தர்ராஜன்(சிவலிங்கம்-கனடா.மொன்றியல்), குணம் திருநாவுக்கரசு(கனடா.மொன்றியல்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
கிரிஷாம்பாள், சத்தியபாமா ஆகியோரின் அன்புமாமியாரும், ஜெசிந்தன், பிரியங்கா, மகிந்தன், சுகந்தன், அனந்தன், ஜெசிந்தா, கஜிந்தா, கீர்த்திகா, அசோக், சஹானா, பார்த்தன் ஆகியோரின் அன்புப்பாட்டியும் ஆவார்.
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே
உன் கரம்பிடித்து நடந்த நாட்கள்
நீ தாலாட்டுப்பாடி உறங்கிய நாட்கள்
அமுதூட்டிய உன் அன்புக்கரங்கள்
இதயத்தின் ஆழத்தில் புதந்த வேர்களாய்
நித்தம் நித்தம் அலை மோதுதம்மா
உனை இழந்து மாதமொன்று ஆனபோதும்
காலத்தின் கணக்கு தப்பாமல் போனபோதும்
ஞாலத்தில் நீ இல்லையென உணர்ர்ந்தபோதும்
நெஞ்சின் ஆழத்தின் வாழ்கிறாய் அம்மா
எம் உணர்வோடு நீ கலந்துவிட்டாய் அம்மா
மாண்டார் வருவதில்லை என
காலங்காலமாய் கூறி வந்தாலும்
மீட்டும் உன் நினைவுகள்
மீண்டும் வரமாட்டாயா என
ஏங்கித் தவிக்கும் இதயங்களின்
ஏக்கம் தீர்க்க நீ வருவாயா
கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து பறித்தெடுத்தவனே
நீ நின்றதும் நடந்ததும்
பரிவோடு எமை வளர்த்ததும்
அத்தனையும் காற்றாகிப் போனதுவோ
அம்மா எங்கள் அன்புத்தாயே
உன் ஆன்மா ஈடேற்றம் பெற
மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்
அனைவரும் ஒன்றிணைந்து
இறையடி தொழுகின்றோம்
உன் ஆன்மா சாந்தி பெறட்டும் அன்புத்தாயே!
எங்கள் அன்புத்தாயின் மறைவுச்செய்தி அறிந்து நேரிலும், தொலைபேசியிலும் எமக்கு ஆறுதல் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு, 11.10.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று கம்பர்மலையில் நடைபெறும் அந்தியேட்டிக்கிரியைகளிலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— பேரன் ஜெசிந்தன்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

