நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னப்பு ஜெயக்குமார்
வயது 569 அக்டோபர், 1962 – 17 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"
எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார்,உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் அச்சுவேலியில் 09/OCT/1962 இல் திரு.திருமதி சின்னப்பு செல்வமணி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.ஜெயக்குமார் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தம்பிரத்திணம் தர்மபாலா, யோகரத்தினம் ஜெயராணி, செல்வரத்திணம் ஜானகிராணி, யோகராணி, விஜியராணி என்பவர்களின் சகோதரமாக குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி நன்னித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகள் கார்மாலா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சுபிதா எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நண்பர்களுடன் தொலைபேசியில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார் பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கிய இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளை,உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 17.08.2019 இல் 56 வயதில் சுவிஸ்ஸில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
அச்சுவேலி மண்ணின் அன்பே
இச்சைகள் துறந்து உழைத்து வாழ்ந்த
பச்சை மலையே பவளமே
மிச்சம் ஏதுமின்றி அள்ளிக் கொடுத்த
உச்ச உறவே உலகைப் பிரிந்தீரே
நித்தம் அழுகிறோம்
நினைவில் ஏங்குகிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

