மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னர் துரைராசா
வயது 8427 அக்டோபர், 1934 – 14 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- வரணி
- வாழ்ந்த இடம்
- இத்தாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி போக்கனைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Reggio ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னர் துரைராசா அவர்கள் 14-10-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னர், சந்தி தம்பதிகளின் அருமை புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமகுமாரி(இத்தாலி), தேவி(சுவிஸ்), கெங்காதரன்(இத்தாலி), விஜயகுமாரி(சுவிஸ்), இராஜகுமாரி(சுவிஸ்), மனோகரன்(இத்தாலி), தர்சினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலம், தவம், உத்தமன், வடிவேல், பார்த்தீபன், தர்சினி, சுஜாதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷ், மிதுனா, றதுனா, சாருஷன், டினோஜன், அனோஷன், அனோமி, ஜிவிதன், ஜோர்ஜா, விகாஸ், கவீஸ், லியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
அன்பானவரும், வாழ்க்கையில் உழைத்து முன்னேறியவருமான சின்னர் துரைராசா அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியின் சகல வளங்களைக் கொண்ட வரணியில் சின்னர் சாந்தி தம்பதிகளுக்கு அருமை மகனாக துரைராசா அவர்கள் 27/Oct/1934 இல் பிறந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய இவர், தோட்ட வேலையை இளமைப் பருவத்திலிருந்து செய்யத் தொடங்கினார். திருமண வயதை எட்டியதும் பெற்றோர் நிச்சயித்தபடி வேலுப்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மகளான இலட்சுமி என்பவரைத் மணமுடித்தார். இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்ததன் பயனாக பிறேமகுமாரி, தேவி, கெங்காதரன், விஜயகுமாரி, இராஜகுமாரி, மனோகரன், தர்சினி எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று நல்ல முறையில் வளர்த்து அவர்களை பெரியவர்களாக்கினார். அவர்களுக்கு குலம், தவம், உத்தமன், வடிவேல், பார்த்தீபன், தர்சினி, சுஜாதா என்பவர்களை வாழ்க்கை துணைகளாக தேர்ந்தெடுத்து திருமணம் முடித்து வைத்தார்.
தனது பேரப்பிள்ளைகளான தனுஷ், மிதுனா, றதுனா, சாருஷன், டினோஜன், அனோஷன், அனோமி, ஜிவிதன், ஜோர்ஜா, விகாஸ், கவீஸ், லியானா போன்றவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர். 2013 இல் தனது மனைவியின் மறைவைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு இத்தாலிக்கு குடிபெயர்ந்து வாழத் தொடங்கினார்.
கதைகள், புத்தகங்கள் வாசிப்பதை வாடிக்கையாக கொண்டவரான இவர், கிரிக்கெட் மீது அலாதி ஆர்வம் கொண்டிருந்தார். தினசிரி நாளிதழ்கள் வாசிப்பதை பழக்கப்படுத்தியதுடன், அனைவரோடும் பாசமாக பழகி வந்தார்.
பக்கவாதத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த இவர் 14.10.2019 இல் 84 வயதில் இத்தாலியில் உள்ள Reggio நகரில் இறையடி எய்தினார்.
அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

