ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னத்தம்பி அருமைத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி அருமைத்துரை

இளைப்பாறிய அரசாங்க உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்

வயது 7118 ஏப்ரல், 1943 – 17 டிசம்பர், 2014

பிறந்த இடம்
நெடுந்தீவு கிழக்கு
வாழ்ந்த இடம்
நெடுந்தீவு, புத்தூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, புத்தூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி அருமைத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த
ஏன்? எங்கே? பிரிந்து போனீர்கள்!

வாருங்கள் என்றோம்
பொறுத்திருங்கள் தை வரட்டும் என்றீர்கள்
காலதேவன் வருவான் என்று
கணித்துமே கூறினீர்கள் என்றறிந்தோம் பின்பு
பேரன்மார்களோ பெருங்கவலை கொண்டார்கள்
பெற்ற மகளின் பிறந்தநாளன்று தம் வாழ்வை
முடித்த மாயம் என்ன!

துன்பத்தில் நாம் துவளும் போதெல்லாம்
உங்கள் துணிவும் துவளாத மனமும்
இன்பத்திலும் துன்பத்திலும் எப்போதும் சிந்தை தளராத
செயலுறுதியும் வந்து எம் மனக்கண்ணில் கலங்காதீர்
மக்காள் எனக்கரங்கள் அணைக்குதே!

எத்தனை ஆண்டானாலும் எம் அப்பா
உங்களை எப்படி நாம் மறப்போம்!
இறைவனடி சேர்வது இயல்புதான் எனினும்
எம் இதயம் இன்னும் அதையேற்க மறுக்குதே
காலம் கரைந்து போவதைக் கணக்கிட்டுப் பார்த்து
பாசத்தைக் கரைத்து விட முடியுமா!

கண்ணீர்ப்பூக்களால் கடவுளை வேண்டுகிறோம்
இறைவா! எல்லாப் பிறவியிலும் எம் அப்பாவின்
பிள்ளைகளாய் பிறக்க நீ அருள் தா!

— மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.