ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி ஆறுமுகம் கனகசபாபதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி ஆறுமுகம் கனகசபாபதி

இளைப்பாறிய இலங்கை போக்குவரத்துச்சபை CTB

வயது 8514 பிப்ரவரி, 1934 – 24 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
காரைநகர் வலந்தலை
வாழ்ந்த இடம்
வட்டுக்கோட்டை, Deuil-La-Barre

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் வலந்தலை இலகலடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Deuil-La-Barre ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஆறுமுகம் கனகசபாபதி அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற துரையப்பா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம்(செல்வா- இளைப்பாறிய தாதியர் கூட்டுறவு வைத்தியசாலை, மூளாய்) அவர்களின் காதல்க் கணவரும்,

கலைச்செல்வி(பிரான்ஸ்), அருட்செல்வி(பிரான்ஸ்), ஜெயச்செல்வி(பிரான்ஸ்), குமாரதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பழனிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன்(ராசா- பிரான்ஸ்), மகேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சற்குணராஜா(செட்டி-பிரான்ஸ்), தர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகம்மா, சிவசிரோன்மணி(மலேசியா), காலஞ்சென்ற நாகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லாவண்யா(பிரான்ஸ்), ரம்மியா(பிரான்ஸ்), துஷ்யந்தி(பிரான்ஸ்), பிரியா(பிரான்ஸ்), வித்தியா(பிரான்ஸ்), சயந்தி(பிரான்ஸ்), அறோன்(பிரான்ஸ்), அன்சோ(பிரான்ஸ்), அபிநாத்(பிரான்ஸ்), டினேஷ்(பிரான்ஸ்), அனோஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அயான், அயாத்தி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரது வட்டுக்கோட்டை இல்லத்திலும் கொண்டாடப்படுகிறது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், படித்த மக்களை அதிகம் கொண்டதும் நெல்வயல்கள், வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த காரைநகர் வலந்தலை இலகலடியில் 14-02-1934 இல் ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் கனகசபாபதி அவர்கள் பாலசுப்பிரமணியம் பழனிவேல் ஆகிய உடன் பிறப்புகளில் கனிஷ்ட புத்திரனாக இவ் அழகு நிறைந்த நாட்டில் அவதரித்தார்.

மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் துரையப்பா விசாலாட்சி தம்பதிகளின் அழகுப் பெண்ணான தாதியர் கூட்டுறவு வைத்தியசாலை மூளாயில் சேவை செய்த செல்வரத்தினம் அவர்களை காதலித்து திருமணம் முடித்தார், இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக கலைச்செல்வி, அருட்செல்வி, ஜெயச்செல்வி, குமாரதாஸ் போன்ற அழகுப் பிள்ளைகளைப் பெற்று அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் இலங்கை போக்குவரத்து சபை(CTB) சாரதியாக கடமையாற்றி ஓய்வு நிலை அடைந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 24.04.2019 இல் 85 வயதில் பிரான்ஸில் உள்ள Deuil la Barre நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

காரைநகர் மண்ணின்
......கடவுள் உள்ளமே
கவலை மறந்து
.......சிரித்து மகிழ்ந்த
பாச உறவே
.....பண்பான உயிரே
பாரினை பிரிந்து .......கவலைகள் தந்தீர்"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.