ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி நித்தியானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி நித்தியானந்தன்

வயது 5727 மார்ச், 1962 – 12 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
இளவாலை சித்திரமேழி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் உடுவில் டச்சு றோட்டைப் பிறப்பிடமாகவும், இளவாலை சித்திரமேழியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நித்தியானந்தன் அவர்கள் 12-08-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நாகரத்தினம் கனகமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மங்கையற்செல்வம்(மங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜானன், கம்சாஜினி, தரஞ்சன், தனுசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசமூர்த்தி(கொக்குவில்), காலஞ்சென்ற தவமணி(சுதுமலை), விக்னேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சீதாதேவி, குணரட்ணம்(சுதுமலை), லோகநாதன்(ஜேர்மனி), முருகானந்தன்(கனடா), மோகனா(லண்டன்), விஜி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜினி(கனடா), திலகராஜா(லண்டன்), சிவநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கோகுலன், நிரோஜினி- கோபி, செந்தூரன், பானுஷா, பிருத்விகா, லிசாங்கி, அபிரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரகாசினி- சிவகுமார், பிரதீபன், சர்மிலன், கிஷானி, கபிஷா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இளவாலை சித்திரமேழியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சேந்தாங்குளம் பாதகாடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் சுன்னாகத்தில் 27/mar/1962 இல் திரு.திருமதி சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.நித்தியானந்தன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கணேசமூர்த்தி,தவமணி,விக்னேஸ்வரி என்பவர்களின் சகோதரமாக குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி நாகரத்தினம் கனகமலர் தம்பதிகளின் அன்பு மகள் மங்கையற்செல்வம்(மங்கை) எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கஜானன், கம்சாஜினி, தரஞ்சன், தனுசிகா எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நித்தி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12.08.2019 இல் 57 வயதில் இளவாலையில் உள்ள சித்திரமேழியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

சுன்னாகம் தந்த
........சுந்தர வதனமே
என்னாலும் அன்பு
........மழை பொழிந்து
கண்ணாக காத்த
.........உறவே
தரணியில் நாங்கள்
.........ஒளிர
பண்பாக வளர்த்து
.........உயர்த்திய உயிரே
கண்ணில் நீர் வழிய
.........கலங்கி அழுகிறோம்

பிற அறிவித்தல்கள்

  1. 10 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.