மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி சொக்கலிங்கம்
வயது 8326 ஆகஸ்ட், 1935 – 6 மே, 2019
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- குப்பிளான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சொக்கலிங்கம் அவர்கள் 06-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாகரன், சசிகலா, சுரேஸ்கரன், வித்தியாகரன், லோகிதகலா, அமிர்தகலா, ஸ்ரீகலா, தனேஸ்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜிதா, அன்னராஜா, சிவதீபா, சிவரூபினி, பிரபாகரன், சுதர்சன், சிவகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, பத்மாவதி மற்றும் ஞானலிங்கம், அருள்ராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராசையா, சிங்கராஜா, மல்லிகாதேவி, காலஞ்சென்ற ரேவதி(கிளி), பரிமளம், காலஞ்சென்ற ஜீவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிராம், விஷ்ணுகரன், வைஷ்ணவி, செந்தூரன், நிலவன், எழிலன், சிவகீரன், வாரணன், ஜோதனா, ரதிவர்ணன், அஸ்வினி, மகிழினி, பெளர்ணிகா கருணிகா, பூர்வீகன், கனிஷ்கா, சந்தோஷ், சஹிந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2019 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,கல்வி அறிவு நிறைந்த மக்களைக் கொண்டதும், நெல்வயல்களும்,மிளகாய்செடிகளும் வெங்காய வயல்களும்,மரக்கறித் தோட்டங்களும்,பழவகைகள்,பயன்தரு மரங்கள் என செழிப்பு மிகுந்த குப்பிளானில் 26/AUG/1935 இல் சின்னத்தம்பி பறுவதம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் சொக்கலிங்கம் அவர்கள் சொர்ணம்மா, பத்மாவதி, ஞானலிங்கம், அருள்ராஜலிங்கம் ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் சின்னத்துரை நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகள் அன்னலட்சுமி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கருணாகரன், சசிகலா, சுரேஸ்கரன், வித்தியாகரன், லோகிதகலா, அமிர்தகலா, ஸ்ரீகலா, தனேஸ்கரன் எனும் அழகுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள்,பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார், இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 06.05.2019 இல் 83 வயதில் குப்பிளானில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
குப்பிளானில் உதிர்த்த
...........குல விளக்கே
குதூகலித்து வாழ்ந்த
...........குடும்பத் தலைவனே
கோவில் சிலையே
.......... கொவ்வைப் பழமே
கோடி ஆண்டானாலும்
......... மறக்க முடிய உறவே.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

