மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி துரையப்பா
பிரபல விவசாயி
வயது 8518 அக்டோபர், 1930 – 28 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- அனலைதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி துரையப்பா அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நவநீதம்(கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,
றுக்குமணன்(காந்தி-இலங்கை), ருத்திரபாலன்(பாலன்-ஜெர்மனி), உமாசங்கர்(சங்கர்-லண்டன்), பிறேமலதா(இலங்கை), பகீரதன்(பகி-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம், பூமணி, காலஞ்சென்ற பேரம்பலம், பார்வதி, காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலைச்செல்வி(செல்வி- ஜெர்மனி), ரதிகலா(லண்டன்), தருமராசா(இலங்கை), யசோதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பெருமாதேவி, தயாபாராசா(விசுவன்), மற்றும் சத்தியரூபவதி, சிவமணி, காலஞ்சென்ற தபோதனராசா, கண்ணம்மா, காலஞ்சென்ற சண்முகசுந்தரம், சரசா, காலஞ்சென்ற கதிரவேலு, தேவி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சீனிவாசகம், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகலனும்,
சயந்தா, சிந்துஜா, சுகனிஜா, பிரியா, சகானா(இலங்கை), நிரூஷன், நிவாசன்(ஜெர்மனி), கரிஸ்(சுவிஸ்), துஷானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2016 திங்கட்கிழமை அன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

