1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி வீரசிங்கம்
ஓய்வுபெற்ற தபாலதிபர், முன்னாள் இணக்கசபைத் தலைவர்- கரவெட்டி, அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 816 ஜனவரி, 1938 – 23 ஜூன், 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி வீரசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும் உங்கள் அன்பு
முகமும் அரவணைப்பும் உங்கள் நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை அப்பா!
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும் யாசிக்க உன் நினைவுகள்
இருந்தால் போதும் தந்தையே!!
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
ஓர் ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
என்றுமே நீங்கள் செலுத்திய அன்பும்
அரவணைப்பும் மாறாது எந்நாளும்
எங்கள் எல்லோரது உள்ளத்திலும்
நீங்கள் தெய்வமாய் வீற்றிருப்பாய்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கரவெட்டியில் 06/Jan/1938 இல் திரு.திருமதி சின்னத்தம்பி இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.வீரசிங்கம் அவர்கள் பொன்னம்மா, சிற்றம்பலம், நடராஜா, பார்வதி, உபாலி பொன்னம்பலம் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு திருமதி சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகள் புவனேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து திருக்குமார், புனிதாலட்சுமி, சபேசன், கேதீஸ்வரன், பரணீதரன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று பண்பாக வளர்த்து யசோதா, சத்தியசொரூபன், கௌரி, நிரஞ்சனா, சஜீபா போன்றவர்களை திருமணம் முடித்து வைத்த அபிராம், மதுவந்தி, லோஷன், ரிஷிகேஷன், சஜீசன், கீர்த்தனா, கிருஷ்னா, லோஜிதன், சானுசா, சங்கீர்த்தன், சேயோன், சனோசன் போன்ற அழகுப் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் தபாலதிபராக சேவை செய்து ஓய்வு பெற்றதுடன், கரவெட்டி இணக்க சபைத் தலைவராக செயற்பட்டதுடன்,அகில இலங்கை சமாதான நீதவானாகவும் சேவை வளங்கிய இவர் கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 23.06.2019 இல் 81 வயதில் கரவெட்டியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
கரவெட்டி மண்ணின் காவல் தெய்வம்
இரவு பகல் பாத்திடா உழைத்த உள்ளம்
சிரம் பணிந்த சிந்தனை உறவு
கரம் கோர்த்த கருணை உள்ளம்
பரமன் பாதம் அடைந்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

