ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னத்தம்பி குமாரசூரியர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி குமாரசூரியர்

வயது 8610 அக்டோபர், 1932 – 21 ஜூன், 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி குமாரசூரியர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் இதய தெய்வமே
எப்படித்தான் தாங்குவேன்
எம்முயிரே உமைப்பிரிந்து
கண்போல் எம்மைக்காத்தவரே
தனைப்பிரிந்து புண்பட்ட நெஞ்சுடனே
புழுவாய் துடிக்கிறோம் ஐயா..!

எங்கள் ஐயா நீர் சென்று
ஆண்டு ஒன்று உருண்டபோதும்
ஆறாது எம்துயரம் மாறாது – எம்
சோகம் அழியாது உம் சிரிப்பு
பல நூறு ஆண்டுகள் ஆனாலும்
காலமெல்லாம் எழுதி வைத்த
ஓவியமாய் வாழ்ந்திடுவீர்கள் எம்முடனே…!

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான, யாழ்ப்பாணத்தின் அருகில் உள்ள இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும் படித்த சமூகத்தைக் கொண்டதுமான மாட்டீன் வீதியில் 10/OCT/1932 ஆம் ஆண்டில் திரு.திருமதி சின்னத்தம்பி வள்ளியம்மைதம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.குமாரசூரியர் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அழகு நிறைந்த இவர் அன்னலட்சுமி, கனகரத்தினம், சரஸ்வதி, பூமணி, இராஜகோபால், மகாலிங்கம் போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி மிக்கேல் சீனிவாசகம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளான மேரி அற்புதராணி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து மீனலோஜினி, லோகேந்திரன், நவீந்திரன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து யோர்ச் இன்பகுமார், துஸ்யந்தி, பிரதீபா போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து கஜிந்தன்,கவினாஸ் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நன்றி உள்ளம் கொண்டும் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் வள்ளலும் ஆவார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 21.06.2019 இல் 86 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

உயிரில் கலந்த உன்னத உறவே
உலகில் சிறந்த உணர்வின் வழியே
உள்ளத்து நினைவை உன்னில் கண்டோம்
எங்கும் நிறைந்திடும் தங்க நாமம்
தங்கள் சிறப்பை தரணியே போற்றும்

பிற அறிவித்தல்கள்

  1. 24 ஜூன், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 23 ஜூலை, 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.