மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி முத்துத்தம்பி
வயது 9220 பிப்ரவரி, 1927 – 18 ஜூன், 2019
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி முத்துத்தம்பி அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
சித்தங்கேணியைச் சேர்ந்த மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
உமாதேவி(உமா- ஆசிரியை கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை), கண்ணதாசன்(விசு- சுவிஸ்), சிவதேவி(சிவா- லண்டன்), தில்லைநடராஜன்(குட்டி- லண்டன்), தில்லைக்கரசி(பவா- டென்மார்க்), விக்னேஸ்வரன்(விக்னேஸ்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தையல்முத்து, மீனாட்சி, விஸ்வலிங்கம், பொன்னுத்துரை, சின்னத்துரை, மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டானியலா(சுவிஸ்), சந்திரசேகர்(லண்டன்), தனுஜா(லண்டன்), கருணலோலன்(டென்மார்க்), சங்கீதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவீனா, சுவாதி, அருண், அபிலாஷ், கெளசிக், அபிராமி, அபிஷேக், அஸ்மிதா, ஆரபி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2019 புதன்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 2:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் சுதுமலையில் புகழ் பூத்த சீமான் திரு.சின்னத்தம்பி அவர்தம் பாரியார் திருமதி தில்லைவனம் அவர்களின் அருமைப் புத்திரனாக 20/FEB/1927 ஆம் ஆண்டில் திரு.முத்துத்தம்பி அவர்கள் இவ் அழகிய பூமியில் தையல்முத்து, மீனாட்சி, விஸ்வலிங்கம், பொன்னுத்துரை, சின்னத்துரை, மார்க்கண்டு போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன், சித்தங்கேணியைச் சேர்ந்த திரு.திருமதி மாணிக்கம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் மீனாட்சிப்பிள்ளை அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக உமாதேவி, கண்ணதாசன், சிவதேவி, தில்லை நடராஜன், தில்லைக்கரசி, விக்னேஸ்வரன் போன்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து டானியலா, சந்திரசேகர், தனுஜா, கருணலோலன், சங்கீதா என்பவரைத் திருமணம் முடித்து வைத்து நவீனா, சுவாதி, அருண், அபிலாஷ், கௌசிக், அபிராமி, அபிஷேக், அஸ்மிதா, ஆரபி, ஆதவன் போன்ற பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் சின்னட்டித்தம்பி எனவும் அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 18.06.2019 இல் 92 வயதில் தெஹிவளை நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"சுதுமலை மண்ணின்
......சுடர் ஒளியே
பதுமைக் குணமே
......பாச உயிரே
எது வரினும்
.....அஞ்சாத உறவே
அற்புதம் ஆற்றி
.....அகிலம் துறந்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

