மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி இராமலிங்கம்
வயது 9630 ஆகஸ்ட், 1923 – 3 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- கோப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் பழைய வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராமலிங்கம் அவர்கள் 03-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
லீலாவதி(இலங்கை), செல்வராசா(லண்டன்), விமலா சின்னக்கா(இலங்கை), துரைராசா(பிரான்ஸ்), திலகவதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரிமளம், இரத்தினம், சொர்ணம்மா, இராசையா, பாக்கியம், தங்கம்மா மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியநாதன்(இலங்கை), சிவகுமாரன்(இலங்கை), சாரதா(லண்டன்), ஜெயகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிஷாந்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), வசந்த்(பொறியியலாளர்- இலங்கை), லக்ஷனா(யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்- இலங்கை), அபிந்தா(ஆசிரியர்- லண்டன்), அபிலாசன்(பல்கலைக்கழகம்- பரிஸ்), அஸ்வீகன்(உயர்நிலைப்பள்ளி மாணவர்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று கோப்பாய் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் பலாலி கிழக்கில் 30/AUG/1923 இல் சின்னத்தம்பி இராமலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பரிமளம், இரத்தினம், சொர்ணம்மா, இராசையா, பாக்கியம், தங்கம்மா, சிவக்கொழுந்து போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் தவமணி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து லீலாவதி, செல்வராசா, விமலா சின்னக்கா, துரைராசா, திலகவதி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சத்தியநாதன், சிவகுமாரன், சாரதா, ஜெயகலா என்பவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து நிஷாந், வசந்த், லக்ஷனா, அபிந்தா, அபிலாசன், அஸ்வீகன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உடன்பிறப்புகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 03.09.2019 இல் 96 வயதில் கோப்பாயில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
பலாலி தந்த பண்பாளனே
பாசம் நிறைந்த சொல்லாளனே
நேச மனமும் நிஜ உருவவும்
வேசம்போடா விசுவாச மனதுடன்
வாழ்ந்து நிலைத்தீர் ஒளியாய்
வீழ்ந்து மறைந்தீர் இருளாய்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

