மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி இராசையா
B.Sc Civil Engineer(London), முன்னாள் பிரபல வர்த்தகர், உரிமையாளர்- Petrol Stations, Owner of Shirley View Nursing Home
வயது 7719 மார்ச், 1942 – 5 மே, 2019
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Bickley
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் நந்தாவில்லைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bickley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராசையா அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கனகரட்ணம், மேரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலஷ்மி(திலகா) அவர்களின் அன்பு கணவரும்,
ஜனனி, Dr. ஜேன்தாரணி, கிருஷாந்தி, அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரசான் அவர்களின் அன்பு மாமனாரும்,
வரம், எய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பரமேஸ்வரி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), செல்வராசா(ஐக்கிய அமெரிக்கா), தனலஷ்மி(ராசத்தி- கனடா), சகுந்தலாதேவி(கனடா), ரதிதேவி(லண்டன்), பத்மினிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்லப்பாபிள்ளை, சிவராசா(இலங்கை), கலா(ஐக்கிய அமெரிக்கா), குணபாலசிங்கம்(கனடா), உருத்திரன்(கனடா), பாஸ்கரன்(லண்டன்), ராஜலிங்கம்(கனடா), இலங்காதிலகம்(டென்மார்க்), சத்தியவந்தன்(கனடா), சர்வகலாநிதி(லண்டன்), ஜெயலஷ்மி(கனடா), சத்தியமூர்த்தி(ஜேர்மனி), சத்தியலிங்கம்(கனடா), சத்தியகீர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நெல்வயல்கள்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்.கொக்குவில் நந்தாவில்லில் 19/Mar/1942 இல் சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளுக்கு சிரேஷ்ட புதல்வனாக இராசையா அவர்கள் பரமேஸ்வரி, சறோஜினிதேவி, செல்வராசா, தனலஷ்மி, சகுந்தலாதேவி, ரதிதேவி, பத்மினிதேவி போன்ற உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன். கனகரட்ணம் மேரி தம்பதிகளின் அன்பு மகள் தனலஷ்மி(திலகா) அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஜனனி,Dr ஜேன்தாரணி,கிருஷாந்தி,அகிலன், ஆகிய பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன்,பிரசான் என்பவரை மகளுக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன், வரம்,எய்டன் போன்ற பேரப்பிள்ளைகளோடு மகிழ்வுற்று வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் பிரபல வர்த்தகராகவும்,ஓயாத உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல வைத்து இயக்கினார். இதேவேளை சட்டன் பிரதேசத்தில் சீமில் பெரிய வலுவிழந்தோர் கண்காணிப்பு நிலையம் வைத்து நடத்தினார்.அத்துடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05.05.2019 இல் 77 வயதில் பிரித்தானியாவில் உள்ள Bickley நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
""கொக்குவில் தந்த
.... குல விளக்கே
உதவிகள் செய்த
......உத்த வீரனே
பாசம் கொண்ட
....பண்பான உறவே
எம்மை விட்டு ....எங்கே சென்றீர்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

