ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னத்தம்பி இராசம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி இராசம்மா

வயது 7515 ஏப்ரல், 1942 – 22 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
மீசாலை வடக்கு
வாழ்ந்த இடம்
மீசாலை வடக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி இராசம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நாமிருந்தோம்
காற்றொன்று வீசியதாய்
நினைவிருக்கிறது
நீ கலைந்துபோன கணம் மட்டும்
நினைவில் இல்லையம்மா..!
உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை
நினைக்க மனம் மறுக்குதம்மா...

நீ இருந்த இடமெல்லாம்
நீ நடந்த சாலைகள் எல்லாம்
உன்னை நினைவு படுத்தும்
நிமிடங்களில் நதிகளும் தோற்கின்றன

எங்கள் கண்களின் முன்னால்
காற்றோடு போனவளே வா
காலன் வரும் நேரம்
இதுவென்று நீ உரைத்திருந்தால்
காத்திருப்போம் அம்மா..!

மீட்டும் விரல்களை
தொலைத்த வீணைகளாய் நாமிங்கு..
கார் இருளில் கலைந்தவளே..!
நீ எங்கே?
உன்னைத் தொழுதேத்த
எம் முன்னே நீ இல்லையம்மா
உன்னைப் போல் ஓர் தெய்வம்
இப்புவியில் இல்லையம்மா
மனக்கண்ணில் நாளும்
உனைக்கண்டு துதிப்போமம்மா
மண்ணில் எம் உயிர் வாழும் காலம் வரை!

மனதோடு எமை சுமந்து
பிரிவோடு துயர் தந்து
ஆண்டுகள் மூன்று ஆனாலும்
ஆறாது உந்தன் இழப்பின்
துயர் நெஞ்சை விட்டு நீங்காது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 13 மார்ச், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 1 மார்ச், 20202ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.