மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி சற்குணராஜா
முன்னாள் ஸ்ரான்லி றோட் சற்குணராஜா & Co உரிமையாளர்
வயது 751 மே, 1943 – 31 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி, Chennai, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி வீதி, சென்னை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சற்குணராஜா அவர்கள் 31-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னம்மா தம்பதிகளின் ஆருயிர் மைந்தனும், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற நமசிவாயம், அன்னம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,
வாசுகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கவிதா(பிரித்தானியா), திரிவேணி(அவுஸ்திரேலியா), விஜயதர்சினி(பிரித்தானியா), கார்த்திக்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஸ்குமார்(பிரித்தானியா), ஜெயேந்திரா(அவுஸ்திரேலியா), குகநாதன்(பிரித்தானியா), பிரியங்கா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஷயன், அனிக்கா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-02-2019 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

