நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி இராசையா திருச்செல்வம்
வயது 405 நவம்பர், 1968 – 23 ஜூலை, 2009
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்கை மண்ணின் புதல்வனாய் புன்னகையின் சொந்தக்காரனாய் புலம்பெயர் தேசத்தில் மனித மாணிக்கமாய் ஓல்ரன் பகுதியில் உலாவியவனே. சுவீசில் சொர்க்க தங்கமாய் சுபீட்சமாய் வாழ்ந்தவனே எம் செல்வனே
உன்பிரிவு உயிருள்ளவரை எமக்கு உறங்காத ஓலமையா உன் பிரிவு உறுதியானது தெரிந்திருந்தால் நான் உனக்கு முன் உறங்கியிருப்பேன் ஊரும் தூங்கியிருக்க. உறங்காமல் நானும் பிள்ளைகளும் உனது வரவை பார்த்திருக்க உன்னையழித்தது ஏன் உறவையறுத்தது ஏன் உலகத்தில் அனாதைகளாக அழுகிறோம். உன்னை நேசித்ததும் உன்பாதமே உலகமென இருந்ததற்கும் உனது தண்டனையா எமக்கு?
மூன்று மாதமாய் விழித்திருக்கிறேன் முடியவில்லை ஐயா தூங்க முழு நிலவே உனது முகம் முழு விம்பமாய் என் முகத்திரையில். அப்பா அப்பா என ஆளுக்கொரு அறையில் அழும் பிள்ளைகள் ஒரு புறம் அயலவரும் அன்பர்களும் ஆறுதல் உரைத்தாலும் உனதாறுதல் போல்வருமா?
அன்று தாயில்லா சகோதரர்களுக்கு தாய் நீ. பின் தாயாய் நான் இருந்தும் தாலாட்டு பாடிய தாயல்லவா நீ. தவிக்கின்றோம் தலையில்லாத புழுவாய் தந்தையில்லா பிள்ளைகளாய். நடமாடும் தெய்வமாய் நம்மோடு இருந்த ஆசிரியராய் நற்பணி புரிந்தாயே நல்வழி சொல்ல நம்முடன் பயணிக்க யாருண்டு? இறைவனாய் இருந்து அருளல் வேண்டும். பிராத்திக்கிறோம் பாணாவிடை சிவனை உங்கள் ஆத்மா சாந்தியடைய.
அன்னாரின் 90 வது நினைவு நாளான 18.10.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் St. Martin Kirche Ringstrasse 36, 4600 Olten என்னும் முகவரியில் நடைபெறும் அந்தியேட்டிக்கிரியைகளில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் அழைக்கின்றோம்.
மனைவி - அன்பழகி
பிள்ளைகள் - பிரதீப், அஐந்தா, பிரதீசு
— மதியழகன் மைத்துனர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

