ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்துரை பாலச்சந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்துரை பாலச்சந்திரன்

வயது 8217 மார்ச், 1938 – 20 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
அளவெட்டி வடக்கு
வாழ்ந்த இடம்
Scunthorpe

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டி வடக்கு அம்பாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Scunthorpe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதி சின்னத்துரை பாலச்சந்திரன் அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று Sawbridgeworth, Hertfordshire இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பான மூத்தமகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காந்திமதி அவர்களின் பாசமிகு கணவரும்,

அஞ்சலி, தயாளன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Benjamin அவர்களின் அன்பு மாமனாரும்,

பாலயோகினி, பாலசுந்தரி, பாலசந்திரேஸ்வரி, பாலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தில்லைநாதன், காலஞ்சென்ற இமயவல்லி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ரத்தினம், வாமதேவன், ரவீந்திரன், வத்சலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஜனி, ரவி, ரகுலன், ரமணி, தமிழினி, வலவன், விறலோன், சுடரோன், மைவிழி, பாவை ஆகியோரின் அருமை மாமனாரும்,

லாவண்யா, மாலவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

லில்லி லக்ஸி, லுய்(Louis), பாலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று Stevenage, Hertfordshire இல் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இறுதிக்கிரியைகள் குடும்ப அங்கத்தினர்களுடன் மட்டும் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

வாழ்க்கை வரலாறு

அளவெட்டி வடக்கு அம்பாள் கோவிலடியை பிறப்பிடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி சின்னத்துரை பாலச்சந்திரன் அவர்கள் சித்திரை 20ம் திகதி அதிகாலை 12:10 மணியளவில் Sawbridgeworth, Hertfordshire இல் இறைபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்ற சின்னத்துரை - தங்கரத்தினம் தம்பதிகளின் மூத்த மகனும் காலம் சென்ற சின்னத்துரை - அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் காந்திமதியின் அன்புக் கணவரும் அஞ்சலி, தயாளனின் அன்புத்தந்தையும் Benjamin அவர்களின் மாமனாரும் லில்லி லக்ஸி, லுயிஸ் பாலா ஆகியோரின் அன்பு பேரனும் பாலயோகினி பாலசுந்தரி பாலசந்திரேஸ்வரி பாலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் நீண்ட கால வாழ்க்கை அன்பு இசை சந்தோசம் நிரம்பியது. அவரது ஐந்து சகோதரர்களில் அதிகளவு அன்பு கொண்டவர். இவர் மகாஜன கல்லூரியின் தலை சிறந்த மாணவராக விளங்கினார். கல்லூரி நாட்களில் சிரேஷ்ட மாணவ தலைவனாகவும் இல்லத் தலைவனாகவும் சிறந்து விளங்கினார். படிப்புடன் இசை ( குறிப்பாக தேவாரம் மற்றும் பக்திப்பாடல்கள் பாடுதல்), உதைபந்தாட்டம், தூர ஓட்டம் என்பவற்றில் ஆர்வத்துடனும் சந்தோஷத்துடனும் ஈடுபட்டார்.உயர் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரியில் படித்து முதல் கட்ட மாணவனாக பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பிரிவை அடைந்தார். இவர் தனது வைத்திய திறமையை கொண்டு ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்காக தனது சேவையை அர்ப்பணித்து தனது துறைமைத்திறனாலும் அன்பான பேச்சாலும் பொறுமையும் கொண்டு பல நாடுகளில் பணியாற்றினார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவரின் வைத்திய வேலைத்திறனும் நெறிமுறைகளும் இவரின் பிள்ளைகள் அஞ்சலிக்கும் தயாளனுக்கும் வைத்தியராக வேண்டும் என்று அகத் தூண்டுதலாக இன்று வரை தொடர்ந்துள்ளது.

வாழ்நாள் முழுவதும் இசை பிரியனாக விளங்கினார். உலகம் பூராவும் தனது இசையால் பலரை மகிழ்வித்தார். இவரின் பாட்டு உணர்வு பூர்வமானதாகவும் அழகிய குரல் வளம் கொண்டதுமாக அமைந்தது. இசை நாடகம் போன்ற பலவற்றில் அளவு கடந்த நாட்டமும் திறனும் கொண்ட பாலா தனது பள்ளிக்கூட நாட்களில் இருந்தே அதனைத் தனக்குக் கிடைத்த வரமாகக் கருதி தன் தொழிலுடன் இசைக்கலையையும் இறுதி வாழ்க்கை வரை வளர்த்த கலைப்பிரியர் ஆவர்.

இவர் பல மேடைகளைக் கண்டு களிப்புண்டார். பாடசாலை, இசைப்போட்டிகள், கோவில், விருந்து நிகழ்ச்சிகள், மகளின் அரங்கேற்றம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் தனது இசை திறனை வெளிக்காட்டினார். இவர் வட இங்கிலாந்து தமிழ் சங்கத்தின் தலைவராக இருந்த போது அங்கு இருந்த தமிழ் மக்களை கூட்டி தமிழ் கலையை வளர்க்க உந்துதலாக இருந்தார்.

வெளிநாட்டு பிரயாணங்களில் பிரியமும் அனுபவமும் கொண்ட பாலா தனது அன்பு மனைவியுடன் துணிகரமான பயணங்களை மேற்கொண்டவர். நைஜீரியா, ஸ்காட்லாந்து போன்ற இடங்களில் மருத்துவ பணியாற்றினார். கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா போன்ற இடங்களுக்கு விடுமுறையில் சென்று வந்தார். இந்தியாவில் 50 க்கும் மேற்பட்ட கோவில்களை கண்டு களித்தார்.

தனது தாய் நாட்டை இதயத்தில் கொண்டு மீண்டும் மீண்டும் சென்று வந்தார்.பாலா சமையலில் அதிகம் விருப்பம் கொண்டிருந்தார். அதுவும் இலங்கை உணவுருசி வகைகளை குடும்பத்தினருக்கு கொடுத்தார். அவரது முட்டை பொரியலை பேரப்பிள்ளைகள் பேராவலுடன் குறுகிய நேரத்தில் உண்டு மகிழ்வார்கள்.இவரின் ஆற்றல்களுக்கும் மேலாக, நினைவில் நிற்பது பாலாவின் இயல்பான நல்ல குணம், பண்பாடு, எல்லோருடன் அன்பு காட்டுவது, மரியாதையும் தாராள மனப்பான்மையும் ஆகும். பாலா தனது வாழ்க்கையில் பலருக்கு ஆதரவாக பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் இருந்தார்.

பாலா முழுமையான நேசமுடைய அன்பான கணவராகவும், சகோதரனாகவும், அன்பான தகப்பனாகவும், பாசமிகு பாட்டனாகவும், பலருக்கு மாமனாகவும், பெரியப்பாவாகவும் அவரின் நண்பர்களுக்கு ஒரு சிறந்த நண்பனாகவும் இருந்தார்.

பாலா தனது அன்பான ஆத்மார்த்தமான பண்புகளால் சென்ற இடமெல்லாம் ஒளியேற்றி வைத்தார். அவர் அவரைத் தெரிந்தவர்களதும் அவருடன் அன்பாக இருந்தவர்களதும் இதயத்தில் என்றென்றும் இருப்பர்.அவரது பெயரை அவரது பேரன் கொண்டுள்ளார். "பாட்டு பாட வா"

Son of late Sinnathurai and Thangaratnam, Husband of Gandhimathi, Father to Anjali and Dayalan, Brother to Balayogini, Balasunthari, Balachandreswary & Balaindran, Grandfather to Lily Lakshi, and Louis Bala
Dr Sinnathurai Balasanthiran ‘Bala’ peacefully passed away at 12:10am on the 20th April 2020 in Sawbridgeworth, Hertfordshire. He lived a long, hearty life filled with love, music and laughter. Bala was born in Alaveddy, Sri Lanka, the eldest of 5 siblings whom he loved dearly. He excelled at school and Mahajana College where he was the senior prefect, house captain and received an outstanding character certificate. As well as studies he enjoyed singing, acting, football and running - all of which he undertook with joy and passion. From Jaffna college he entered the first batch of Peradeniya Medical Faculty and went on to serve thousands of patients in many continents with the utmost dedication and professionalism. His work and ethos as a doctor continues to be a great source of inspiration for his children, Anjali and Dayalan. Singing was a lifelong passion and Bala nurtured and took this gift all over the world to the delight of many. A versatile performer, he was capable of expressing and evoking a range of emotions with his beautiful voice. He enjoyed a variety of stages, including school assemblies, musical competitions, temples, party celebrations and his daughter’s Arangetram stage in London, to name but a few. As President of the Northern Tamil Association, he loved to see people coming together and cultural events thrive. Bala was a veteran traveller, enjoying many adventures across the world with his cherished wife, Gandhi. He visited Nigeria, Scotland, Canada, Australia, New Zealand, India (taking in over 50 temples!) and his beloved Sri Lanka, where his heart took him time and time again. Closer to home, Bala loved cooking, bringing a taste of Sri Lanka to his family. His ‘muttai porriyal’ was often devoured within minutes by his grandchildren. Beyond all of his many achievements, the most memorable of all was his charming character and generosity. Bala provided support to many throughout his life, whilst never expecting anything in return. He was an utterly devoted husband, father, brother, grandfather and ‘mama’ to so many. He lit up every room he walked in with his warmth and spirit and will live on forever in the hearts of those who knew and loved him. His grandson will proudly carry his name. ‘Pattu Padda va’. Due to the current situation, a small private ceremony will be held on 5th May with a larger memorial and celebration when able. Contact: Instead of flowers, please send donations via justgiving to ‘Ambal temple’ a place close to his heart:

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.