31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா நாகமுத்து
வயது 6919 ஜனவரி, 1950 – 14 ஜூன், 2019
- பிறந்த இடம்
- வாதரவத்தை
- வாழ்ந்த இடம்
- வாதரவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா நாகமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அரவணைத்த உம் பிரிவு அறிந்துள்ளம்
ஆறாத்துயரதனால் ஆறாய் கண்ணீர் பெருக
இனிய சொல், ஈகை, பண்பு என்று
அனைவரும் போற்றிட வாழ்ந்தீர்கள்
மற்றவர்க்கு உதவும் பண்பு கொண்டு
எல்லோரும் போற்றிட வாழ்ந்தீர்கள்
இறைவன் சன்நிதியின் அமைதியிலே
இனிமை காண இறையருள்
வேண்டி பிராத்திக்கின்றோம்
கண்கள் கலங்குகிறதே காற்று வீச மறுக்கிறதே
உம் மறைவுதனை எண்ணி- எம் நெஞ்சம்
வெடித்து விடும் போல் இருக்கிறதே
நேற்றுவரை வாழ்ந்த வாழ்க்கை- இன்று
பாரை விட்டு போனதேனோ!
கதறி அழும் உம் உறவுகளுக்கு
யார் இனி ஆறுதல் சொல்வார்கள்?
கவலைகள் தீர கண்திறந்து பாராயோ?
நெஞ்சமதில் நிலைத்து நின்று
எண்ணமதில் என்றும் நிலைத்து
வண்ண மலர் வாசமென
எம் மனங்களிலே வீசிநின்றீர்
கண்ணிமைக்கும் காலத்துள்
காலனுமைக் கவர்ந்து சென்ற
கொடுமையெண்ணிக் கலங்குகின்றோம்
மனம் வெதும்பி வாடுகின்றோம்.
எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் புத்தூர் வாதரவத்தையில் 19/JAN/1950 இல் திரு.திருமதி சின்னையா செல்லாச்சி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.நாகமுத்து அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் கமலாதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து பத்மலோஜினி, பிறேமலதா, செல்வரூபினி, நவனீதராஜா, பிரதீபராஜா(சிரேஷ்ட விரிவுரையாளர்) றஜிதா போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று பண்பாக வளர்த்து புலேந்திரன், கணேஸ்வரன், சோபனா, ஸ்ரீதேவி, எட்றொசான் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து மதுர்ஷா, துபாஷன், சுஜீவன், சுஜீவா, ரனேஷன், சேஷ்மிகா, தருண், நிருண், எனிசன், எயானா எனும் அழகுப் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 14.06.2019 இல் 69 வயதில் புத்தூரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
எங்கே நாம் தொலைத்தோம்
எங்கு சென்று மறைந்ததோ
தங்காமல் போனது ஏன்
தவறு எங்கே நிகழ்ந்தது
திங்கள் ஒளிச் சுடராய்
தினம் பூத்த முல்லை போல்
தங்கினாய் மனதில் தவிக்க விட்டுச் சென்றாயே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

