நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா நாகராசா
உழவு இயந்திர திருத்துனர்
வயது 728 ஜூன், 1947 – 3 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசியிலும் மற்றும் சமூக வலைதளங்கள் ஊடாகவும் தொடர்புகொண்டு தம் இரங்கலை தெரிவித்த அனைவருக்கும், வெவ்வேறு வழிகளிலும், நேரில் வந்தும் உதவி செய்தவர்களுக்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
முல்லைத்தீவு மாவட்டத்தில் படித்த மக்களை அதிகம் கொண்ட இடமும், போர் உச்சம் கண்ட இடமும் தெங்குதோட்டம், மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகும் சிறப்பும் பெற்ற புதுக்குடியிருப்பில் 08/JUN/1947 இல் திரு.திருமதி சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.நாகராசா அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மாசிலாமணி, தங்கமணி, செல்வநாயகி, செல்வச்சரஸ்வதி, திலகவதி எனும் சகோதரங்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவரானதும், திரு.திருமதி தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகள் அன்னலட்சுமி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து நாகறஞ்சினி, நகுலேஸ்வரன், கலைச்செல்வி, பிரியா, சதீஸ்வரன் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து துரைரட்ணம், ஜெயச்சந்திரன், வசந்தரூபன் போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து தனுஷன், கிருஷாந்தன், சுதர்சினி, தர்ஷனா, ஜஸ்வின், ஜஸ்மி, அர்வின், கிவிஷன், கிவிஷா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் உழவு இயந்திரம் திருத்துவதில் சிறப்பாக செயற்படுவதால் மெக்கானிக் நாகராசா என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்ட இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 03.09.2019 இல் 72 வயதில் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரத்தில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
மீசை மாமா பாச மாமா
மெக்கானிக் மாமா
மெல்லச் சிரிக்கும் தங்க மாமா
காசைப் பாராது கடமை செய்யும்
உயர்ந்த உள்ளம்
எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றி
எங்கே போனீர் அன்பு மாமா.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

