ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

சின்னம்மா வீரகத்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னம்மா வீரகத்தி

வயது 8813 ஜூலை, 1928 – 23 டிசம்பர், 2016

பிறந்த இடம்
கைதடி மேற்கு
வாழ்ந்த இடம்
கைதடி, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கைதடி மேற்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கைதடி மேற்கு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கைதடி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னம்மா வீரகத்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், கொத்தன் வள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், சிவலை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரகத்தி அவர்களின் அன்பு மனைவியும்,

இலட்சுமி(இலங்கை), சிவசோதி(இலங்கை), கந்தசாமி(சுவீடன்), சிவராஜா(இலங்கை), சிங்கராஜா(இலங்கை), சிறிஸ்கந்தராஜா(பிரான்ஸ்), சிங்கராணி(லண்டன்), காலஞ்சென்றவர்களான சங்கரன், சிவபாக்கியம், சிவலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சின்னப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்றவர்களான கந்தன், சின்னம்மா, செல்லையன், சின்னன் மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், கந்தசுவாமி, கோபாலன், மற்றும் சிவகுமார்(லண்டன்), சரோஜாதேவி(சுவீடன்), பேபிகா(இலங்கை), பரமேஸ்வரி(லண்டன்), நாகேஸ்வரி(இலங்கை), சாந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கந்தையர் அவர்களின் அன்பு மைத்துனியும்,

துயிஸ், றெபிக்கா, றெச்சல், தருமராசா, கந்தசாமி, தவமலர் ரஞ்சினி, புஸ்பராஜா, காலஞ்சென்ற கிருஸ்ணகுமார், கிருஸ்ணபவான், கோகிலன், காந்தரூபி, வசந்தரூபன், பரமானந்தரூபன், சிவரூபன், கோமுகி, தவரூபன், மோகனராஜ், சர்மிளா, கேமாளா, விக்ரோரியா, வசீகரன், துஷாந்தன், துஷாந்தினி, கிருஷாந், தர்மேந்திரன், சாந்தன், துஷியந்தன், றோகினா, நிருஜா, லவன், லதுஷன், லஜிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

என்னைப் பெற்ற தாயே!
ஏங்கினேன் உனைப்பார்க்க
என்னை நீ உன் சிறகிலேவைத்தாய்
“ஆத்தை” என்று உன்னை
அன்போடு அழைப்பேன் அம்மா!
நாடு விட்டு நான் வந்து
தனிமரமாய் நிற்கையிலே
ஆறுதல் உன் வார்த்தை அம்மா!
என்று உன்னை என் விழியால் காண
அம்மம்மா நீங்கள் எம்மை
அரவணைக்கும் நாள் வருமோ?
நல்ல உங்கள் அன்பும், ஆசியும்
என்றும் எம்முடன் இருக்கட்டும்
உங்கள் ஆத்ம சாந்திக்கு
இறைவனின் பாதங்களில் வைத்து மலர் தூவுகின்றோம்.

ஆயிரம் சொந்தங்கள் அருகில் இருந்தும்
ஆறுதலுக்கு நீங்கள் இல்லை அம்மா
எங்கள் குல ஒளிச்சுடரே!
திங்கள் ஒளி முகச்சுடரே!
தாய் என்ற எங்கள் தெய்வமே!
உங்களை நாமென்றும் மறவோமே!
உலகயே எதிர்த்து உன்னதங்களை செய்தவளே!
வறுமையோ வருத்தமோ வாடிடும் துன்பமோ!
எதையும் தாங்கிடும் இதையமே!
வறுமையில் செம்மையாய் வாழ்ந்தாயே!
வருந்தி எம்மை வாழவைத்த தாயே!
பொருமை மிக்க எம் தாயே!
உமது ஆத்மா சாந்திக்காய்
இறைவனது பாதங்களில் வேண்டி நின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!

அன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு ஆறுதல் வார்த்தை சொன்ன அனைவருக்கும், தாயகத்தில் உணவுகள் தந்து உபசரித்தவர்களுக்கும், எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் அவரது இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், சகல வழிகளிலும் அந்தியேட்டி சபிண்டகரணக் கிரியையிலும், தாயகத்திலும், வெளிநாடுகளிலும், தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறி பல்வேறு வழிகளிலும் ஒத்தாசை புரிந்த அனைவருக்கும் மற்றும் London Church உறவுகளுக்கும், தாயக Church உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக்கிரியை 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று வீரகத்தி சின்னம்மா இல்லம் கைதடி கிழக்கு உதயசூரியனில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் அதே முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று London Community Church இல் அன்னாரின் நினைவாக மு.ப 10:00 மணி முதல் ந.ப 12:00 வரை துதி ஆராதனையும் நன்றி ஜெபமும் நடைபெற்று அதனைத்தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

— வீரகத்தி சிங்கராணி(மகள்- லண்டன்)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.