மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரநாதன் மங்கையர்கரசி
7 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- துன்னாலை தெற்கு
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் மங்கையர்கரசி அவர்கள் 07-04-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம் நீலாயதாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராணி, வேணுகோபால், சிவகுமாரன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செகராஜசேகரம், சிவயோகம், தெய்வகடாச்சம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராஜநாயகம், சஞ்சயன், தவராணி, பாமினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரசாந், பிரவீந், செளமி, சோபி, மேவின், மேரா, கரிஷன், கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் கிரியைகள் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

