ஆறுதல்

மரண அறிவித்தல்

சிற்றம்பலம் ஆறுமுகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிற்றம்பலம் ஆறுமுகம்

வயது 7210 பிப்ரவரி, 1947 – 6 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
கோப்பாய்
வாழ்ந்த இடம்
கோப்பாய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் ஆறுமுகம் அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திராதேவி(இலங்கை), காலஞ்சென்ற சின்னத்தம்பி, இளையதம்பி, சிவநாயகி, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபாசினி(இலங்கை), கணேஷ்(லண்டன்), கவிதா(இலங்கை), சிவரமணன்(கனடா), சுரேந்தினி(இலங்கை), காலஞ்சென்ற சுபாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மநாதன் (இலங்கை), சாரு(லண்டன்), ஆரணன்(இலங்கை), சிவகெளரி(கனடா), ஜெயராசலிங்கம் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கர், சங்கவி, சகி, வேணு, யனுசன், சஷ்வின், ஆதிஷ், ஆருஷன், மிதுஷா, வருண், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2019 வியாழக்கிழமை அன்று நீர்வேலி கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் கோப்பாயில் புகழ் பூத்த சீமான் திரு.சிற்றம்பலம் அவர்தம் பாரியார் செல்லமுத்து அவர்களின் அன்பு மகனாக 10/FEB/1947 ஆம் ஆண்டில் திரு.ஆறுமுகம் அவர்கள் சந்திராதேவி, சின்னத்தம்பி, இளையதம்பி, சிவநாயகி, வள்ளியம்மை போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்து உயர்நிலை அடைந்த இவர் திரு.திருமதி சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளான தவமலர் அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக சுபாசினி, கணேஷ், கவிதா, சிவரமணன், சுரேந்தினி, சுபாஸ்கரன் போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்து பத்மநாதன், சாரு, ஆரணன், சிவகௌரி, ஜெயராசலிங்கம் போன்றோரைத் திருமணம் முடித்து வைத்து சங்கர், சங்கவி, சகி, வேணு, யனுசன், சஷ்வின், ஆதிஷ், ஆருஷன், மிதுஷா, வருண், அக்சயன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 06.09.2019 இல் 72 வயதில் கோப்பாயில் இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

கோப்பாய் தந்த குல விளக்கே
காப்பார் அற்றுத் தவித்த எம்மை
பாப்பார் அக்கறை உள்ளமுடன்
சேர்த்தார் நல்நிலை அடைய
வீழ்ந்தார் எமை விட்டு
காப்பார் இன்றி கதறி அழுகிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 5 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.